ஒளியும் ஒலியும்!


இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒளிபரப்பு மசோதா 2006 ஊடகத்துறையில் ஒரே நிறுவனம் பலவகை ஊடகதளங்களில் தனியாதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையாகவரையப்பட்டுள்ளது. தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பம், வான்வெளி, உள்துறை, வணிகம் மற்றும் சட்ட அமைச்சகங்களின் பின்னூட்டங்களையும் திட்டக் கமிஷனின் கருத்துக்களையும் எதிர்பார்த்திருக்கிறது. மழைக்கால மக்களவை கூடத் தொடரில் விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது. ஒரு ஊடக பதிப்பாளர் மற்றொரு ஊடகத்தில் 20% க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. உதாரணமாக ஒரே நிறுவனம் டி.வி, FM மற்றும் DTH சேவைகளில் தனியாதிக்கம் செய்ய முடியாது. 1995இலேயே உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்த இந்த பல்வகை கருத்துக்களுக்கான வழிமுறை இந்த மசோதா மூலம் கொண்டு வரப்பட விருக்கிறது. ஆனால் புதிய தொழிற்நுட்பங்களான செல்பேசி வழி டிவி, இணையவழி தொலைக்காட்சி (IPTV) முதலியன இதன் செயல்பாட்டில் சேர்த்துக் கொள்ளபடவில்லை.

இந்த மசோதாவில் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) போன்று ஒளிபரப்பு கட்டுப்பாட்டு ஆணையம் (Broadcast Regulaory Authority) அமைக்கப் படும். இதனால் ஒளிபரப்புத்துறை சம்பந்தமாக TRAI வெளியிடும் விதிகளை இனி புதிய ஒளிபரப்பு ஆணையம் கட்டுப்படுத்தும். தவிர கேபிள் ஆபரேடர்கள் மற்றும் MSOக்களுக்கான உரிமங்களும் இவ்வாணையம் கட்டுப்படுத்தும். அன்னிய தொலைகாட்சி ஒளிபரப்புகள் 15% ஆவது உள்ளூர் தயாரிப்புகளையும் எல்லா ஒளிபரப்புகளும் குறைந்தது 10% பொதுநல நோக்கமுடையவையாகவும் இருக்க வேண்டும்.

ஒளிபரப்புகளின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் சில clauseகளுக்கு ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உள்ளடக்க விதிகளுக்குப் புறம்பாக எந்த ஊடகமாவது ஒளிபரப்பினால் மாவட்ட கலெக்டர்/காவல் ஆணையர் நிலை அதிகாரிகள் ஊடக ஒளிபரப்பு இயந்திரங்களை முடக்கவும் அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதால் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதே இந்த எதிர்ப்பின் ஆதாரம். இன்னும் அழுத்தமாக 37வது ஷரத்து இத்தகைய நடவடிக்கையில் எந்த சிவில் நீதிமன்றமும் தலையிட முடியாது என்கிறது.

இந்த மசோதா அரசு ஆணையானால் சன் தொலைக்காட்சியை எவ்வாறு பாதிக்கும் எனத் தெரியவில்லை. சமீபத்திய பங்கு விற்பனை இந்த 20% முதலீடு தடைகளை மேற்கொள்ளவே எடுக்கப் பட்டிருக்குமோ ?

6 மறுமொழிகள்:

Ram.K கூறுகிறார்

ஆம். இந்த முயற்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. பல மாற்றங்களுக்கு வழி வகுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை.

யாருக்கும் பொதுவான மரணம் போன்ற ஒரு தோற்றத்தை அரசு மக்கள் மனதில் ஏற்படுத்தினால் அது நாட்டுக்கு நல்லது.


ஆதரவுக் குரலுடன்
பச்சோந்தி

Boston Bala கூறுகிறார்

பதிவிற்கு நன்றி!

மணியன் கூறுகிறார்

வாங்க ராம்பிரசாத், (பச்சோந்தி என்று கூப்பிட தயக்கமாக இருக்கிறது, !Sorry for breaking your privacy)

//யாருக்கும் பொதுவான மரணம் போன்ற ஒரு தோற்றத்தை அரசு மக்கள் மனதில் ஏற்படுத்தினால் அது நாட்டுக்கு நல்லது.//
புரியவில்லையே :((

மணியன் கூறுகிறார்

நன்றி பாஸ்டன் பாலா.

Ram.K கூறுகிறார்

//ஒரே நிறுவனம் பலவகை ஊடகதளங்களில் தனியாதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையாக //

சமரசம் உலாவும் இடம் போல எல்லோரும் சமம் என்ற வகையாக.

சீர்காழி கோவிந்தராஜன் பாடல்

:-)

மணியன் கூறுகிறார்

மீண்டும் வருகைக்கு நன்றி இராம்பிரசாத். உங்கள் போட்டிக்கான ஆக்கம் கண்டேன். வெற்றிபெற வாழ்த்துக்கள்!!