ஐய்ஸ்வர்யா ராய் நலமே!

நேற்றைய தினம் ஐய்ஸ்வர்யா ராய் கார் விபத்தில் மரணம் (பார்க்க) என்று ஒரே வதந்தி. க்ளோபல் ந்யூஸ் ஏஜென்சி என்ற செய்திநிறுவன பத்திரிகை அறிக்கை போல வந்த மின்னஞ்சல் அனைவரையும் துயரத்திற்குள்ளாக்கியது. அந்த புனைவு செய்தியின் படி விபத்தில் சிக்கிய கார் பலமுறை உருண்டு அந்த இடத்திலேயே நடிகை இறந்ததாக கூறுகிறது.செய்தியை உறுதி செய்யும் முகமாக நியூயார்க்கின் எல்லா செய்திநிறுவனங்களுக்கும் மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளுமாக ஒரே கலவரம் தான். அவர் தற்சமயம் சென்னையில் குரு படப்பிடிப்பில் கலந்துகொண்டிருப்பதாகவும் நலமே என்றும் அவரது மேலாளர் ஹரிசிங் தெரிவித்துள்ளார்.

இதன் ஆதிமூலம் www.fakeawish.com என்னும் தளத்தில் வழங்கப்படும் மென்பொருளாகும். இதன்மூலம் நமக்கு வேண்டாதவர் பெயரை எந்த செய்திஅறிக்கையிலும் இட்டு 'உண்மையான' செய்தி போல காட்ட முடியும். ஆரம்பத்தில் நண்பர்களை கலாய்ப்பதற்க்காக ஏற்பட்டது இன்று வினையாக முடியும்வரை வந்திருக்கிறது.இதை யார் செய்தாலும் மிக மட்டமான மனநிலை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. இணையத்தில் வருபவன எல்லாவற்றையும் நம்பிவிட முடியாது என எச்சரிக்கவே இந்த பதிவு.

24 மறுமொழிகள்:

Anonymous கூறுகிறார்

ஆம்!!."வதந்தீ" மிக வேகமாகபரவி
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி
விட்டது.
அன்புடன்,
துபாய் ராஜா.

துளசி கோபால் கூறுகிறார்

ஆமாங்க மணியன். நேத்து இரவு இந்த செய்தி கிடைத்ததும் மனம் பதறியதென்னவோ உண்மை. கூடவே இருந்த சுட்டியைப் பின் தொடர்ந்ததில் இது முழுக்க முழுக்கப் பொய் என்று தெரியவந்தது.

அதுவுமில்லாமல், நேற்று ஹைவேயில் ஒரு கார் விபத்திற்குள்ளாகி, புரண்டுபுரண்டு விழுந்ததைச் செய்தியில் காண்பித்தார்கள். கடைசி விநாடியில் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி பார்க்க நேரிட்டதால் இதைத்தான் காண்பித்திருக்கின்றார்கள் என்று வேறு நினைத்துக் கொண்டேன்.

எப்படி இருந்தாலும் இது மிகவும் கண்டிக்கத் தக்கதுதான்.

ரவி கூறுகிறார்

விடுங்க...திருஷ்டி கழிந்தது...

:)

மணியன் கூறுகிறார்

வாங்க துபாய்ராஜா,உலகம் இணைந்துள்ள தன்மையில் ஒரு சிறு பொறியும் வெகுவிரைவில் தீயாக பரவி விடுகிறது.

- யெஸ்.பாலபாரதி கூறுகிறார்

//விடுங்க...திருஷ்டி கழிந்தது...

:)//

அப்ப அக்காவுக்கு இனி கல்யாணம் ஆகிடும்னு சொல்லுங்க..

மணியன் கூறுகிறார்

வாங்க துளசி டீச்சர். எதிலெல்லாம் விளையாடுவது என்ற வரையறை இல்லாமல் போய்விட்டது. :(
இதன் தாக்கத்தை உணர்ந்து செய்தார்களா என்று தெரியவில்லை. கிடைத்த மென்பொருளை சோதிக்க அது இணையத்தின் வல்லமையால் இத்தனை வினையாக முடிந்தது. ஆனாலும் fakewish தள காரர்களின் concept படுமட்டமானது.

மணியன் கூறுகிறார்

நன்றி செந்தழல் ரவி.

மணியன் கூறுகிறார்

வாங்க யாழிசைச்செல்வன், அப்படியும் இருக்கோ ?

வன்னியன் கூறுகிறார்

நல்லவேளை யாரும் தற்கொலை செய்யவில்லை.

மணியன் கூறுகிறார்

வாங்க வன்னியன், அது வேறயா ?

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

அப்படியா? இந்த மாதிரி செய்தி பரவியதே தெரியாது.. நல்லது தான் :)

யாழிசைச் செல்வன், ஐஸ் உங்களுக்கு அக்கா வேணுமா? அவ்வளவு வயசாய்டுச்சா ஐஸூக்கு?!! உங்களுக்கே டூமச்சா தெரியலை?!!

Sivabalan கூறுகிறார்

சார்,

சரிந்துவரும் இமேஜை தடுக்க ஏன் ஐஸ்வர்யாவோ அல்லது அவருக்கு வேண்டியவர்களோ செய்திருக்க கூடாது?

Chellamuthu Kuppusamy கூறுகிறார்

சரிந்து வரும் இமேஜ்.. இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏதோ வங்காள மொழிப் படத்துல விதவை கேரக்டர்ல வந்து எசகு பிசகா நடிக்கராங்களாம்.. (நன்றி மாலை மலர்)

- குப்புசாமி செல்லமுத்து

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ், நீங்க போயிருக்கும் நாட்டிலேதான் அதிக குழப்பம். உங்களை செய்தி அடையாததும் நல்லதுதான்.

யாழிசைசெல்வன் தமிழ்மண தாக்கத்தில் அக்காவென்று விட்டாரோ ? இருந்தாலும்
November 1, 1973இல் பிறந்த ஐஸ் அவருக்கு அக்காவாக இருக்க சான்ஸ் இருக்கே..இருங்க, இருங்க. . நீங்கள் அவர் profileபடத்தைப் பார்த்து கிண்டலா ? நான் ஜூட் :)

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன், ஐஸுக்கு இல்லாத விளம்பரமா? இது எதோ கணினியில் விளையாடியது வினையான கதை.

மணியன் கூறுகிறார்

வாங்க குப்புசாமி செல்லமுத்து, (எதுங்க உங்க பெயர் ?) இப்போது மணிரத்தினத்தின் குருவில் காதலனாக சொல்லப்படுகின்ற அபிஷேக் பச்சனுடன் சென்னையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Thekkikattan|தெகா கூறுகிறார்

மணி,

கரெக்டா ஐசு...அப்படின்னவுடன் ஓடி வந்துட்டேன் பார்த்தீங்களா, அப்பாடன்னு இருக்கு ஐசுக்கு ஓண்ணும் ஆகலை அப்படின்னு தெரிஞ்சுகிட்டவுடன் ;-))

தெகா.

மணியன் கூறுகிறார்

வாங்க தெ.கா, ஒரே பழைய பாட்டை போட்டு போரடிக்க வேண்டாமென்றுதான் குளிர்ச்சியாக 'ஐஸ்' பற்றி போட்டேன்.

Unknown கூறுகிறார்

நல்லவேளை நான் இந்த கெட்ட செய்தியை படிச்சு கவலைப்படாம அது வதந்திங்கற உண்மையை மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி. நல்ல அம்சமான படமாத்தான் போட்டிருக்கீங்க..

மணியன் கூறுகிறார்

நன்றி வெங்கட்ரமணி.

வெற்றி கூறுகிறார்

மணியன் அய்யா,

//இதை யார் செய்தாலும் மிக மட்டமான மனநிலை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. //

நானும் உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்.

//இணையத்தில் வருபவன எல்லாவற்றையும் நம்பிவிட முடியாது என எச்சரிக்கவே இந்த பதிவு.//

நன்றிகள் அய்யா.

மணியன் கூறுகிறார்

நன்றி வெற்றி.

Chellamuthu Kuppusamy கூறுகிறார்

என்ன எழுதினாலும் அதன் கடைசியில பேர் போட்டுப் பழக்கமாயிருச்சுங்க..

மணியன் கூறுகிறார்

மிக நல்ல வழக்கமே, நான் கேட்டது குப்புசாமி உங்கள் பெயரா அல்லது செல்லமுத்தா என்று.
ஏனென்றால் சிலபேர் அப்பாபெயர்.தங்கள் பெயர் என்று வைத்துக்கொள்கிறார்கள், சில பேர் தங்கள் பெயர்.அப்பாபெயர் வைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் எந்த வகை ?