நவிமும்பைக் கலவரங்கள்

மும்பையின் புறநகர் பகுதியான புதிய மும்பை எனப் பொருள்படும் நவிமும்பை கடந்த மூன்று நாட்களாக பதட்டத்தில் இருந்துவருகிறது. இங்கு அரசு இயந்திரம் எந்த அளவு செயலிழந்து பரிதாபநிலையில் உள்ளது என்பதை உணர்த்தியுள்ளது










இங்குள்ள கிராமங்களில் விவசாய மற்றும் மீனவ மக்கள் வசித்துவந்தனர். புறநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இங்கு விவசாயப் பொருட்கள் விற்பனை கேந்திரம் APMC ( சென்னையின் கோயம்பேடு மார்கெட்போல) அமைக்கப் பட்டபோது பளுதூக்கும் 'மாத்தாடி'கள் (பெங்களூரின் கலாசி, கேரளத்தின் அட்டமாரி) இங்கு குடியேறினர். அவர்களுக்கு தனி காலனியும் அரசு அமைத்துக் கொடுத்தது. அவர்கள் ஒரு கூட்டமாக வசித்ததாலும் தொழிற்சங்க நடவடிக்கைகளாலும் ஓட்டு வங்கி ஏற்படுத்தியதால் அரசியல்வாதிகளின் அரவணைப்பும் இருந்தது. கன்சோலி என்ற கிராமத்து மக்களுக்கும் இவர்களுக்கும் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டவாறு இருந்தன. உள்ளூர்மக்கள் சார்பாக கணேஷ் நாயக் என்ற NCP பிரமுகரும் மாத்தாடிகள் பக்கம் சசிகாந்த் ஷிண்டே என்ற NCP பிரமுகரும் அரசியல் நடத்தி வந்தனர். இவர்களிடையே ஏற்பட்ட யார்பெரியவன் சண்டையே, ஹோலிதினத்தன்று நடந்த ஈவ்டீஸிங் சம்பவத்தை இத்தனை பெரிய ரகளையாக்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்த கலவரத்தில் காவலர் துப்பாக்கிசூடு நடத்த மூன்று பேர் பலி; 76 பேர் (22 போலீஸார் உட்பட) காயம். வழமைபோல விசாரணைக் கமிஷன் அமைக்கப் பட்டிருக்கிறது.


அதன் பின்விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. அமைதிக்கு பழக்கப்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிகளால் கலவரமடைந்துள்ளனர். எங்கள் அலுவலகமும் இன்று 4:30 மணிக்கே மூடப்பட்டது. வீட்டிற்கு விரைவோர் பொது போக்குவரத்து இன்றி சிரமமடைந்தனர்.


நவிமும்பை காவல்துறை ஏன் உரிய நேரத்தில் அதிக காவலரையும் RAF எனும் அதிரடிப்படையையும் மும்பையிலிருந்து கோரவில்லை என்பதும் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பதிலாக இரப்பர் குண்டுகளையும் தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தவில்லை என்பதும் சந்திக்கும் நண்பர்களின் கேள்விகளாக இருக்கின்றன. இதன் நடுவே மாநில உள்துறை அமைச்சர் ,” இருபாலருமே மராட்டி பிந்தங்கிய வகுப்பினர்; அவர்களுக்குள்ளேயே பேசி சரிசெய்து கொள்வர்" என்று கூறுவதிலிருந்து தப்பித் தவறி இவர்கள் பிறமாநிலத்தவர்களாகவோ (பீஹாரி, பெங்காலி), பிறமதத்தவர்களாகவோ (பங்களாதேசி) இருந்திருந்தால் நிலமை கட்டுக் கடங்காது போயிருக்கக் கூடும் என்பது புலப்படுகிறது. இத்தகைய நாசுக்கான சூழலை கையாளும் பக்குவம் நமது அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லை என்பது கவலை அளிக்கிறது.


4 மறுமொழிகள்:

Sudhakar Kasturi கூறுகிறார்

அன்பின் மணியன்,
அருமையான பதிவு. உட்பூசல்கள் இந்தச் சேரிகளில் நீறு பூத்த நெருப்பாகவே இருந்திருக்கிறது. அனைத்துக் கலவரங்களுக்கும் மூலம் அரசியல் மட்டுமே.
உள்நடப்பை இத்தனை தெளிவாக எழுதியதற்கு நன்றிகள்.
அன்புடன்
க.சுதாகர்

மணியன் கூறுகிறார்

நன்றி சுதாகர்.அன்றைய அரசியல்வாதிகள் கலவரங்களை தவிர்க்க மக்களை வழிநடத்தினர். இன்றோ சிறு சம்பவங்களிலும் அரசியல் ஆதாயம் தேடி அப்பாவி மக்களை பலி கொடுக்கின்றனர்.

Costal Demon கூறுகிறார்

நல்ல பதிவு...

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி ராம்ஸ்.