வந்தாச்சு வந்தாச்சு தேர்தல் வந்தாச்சு !!

ஆச்சு, இங்கே நிலாதேர்தல் முடிந்தவுடன் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும் ஒரு கட்ட தேர்தல் நாளாக மே மாதம் 8ம் நாள் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13 அன்று முறையாக அறிவிக்கப்பட்டு 20. 4.06 வரை வேட்பாளர் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 24/04/06.

தமிழ்நாடு தவிர மற்ற நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அசோம் (புதிய பெயர்) 03/04/06 & 10/04/06 (2 கட்டம்)
மேற்குவங்கம் 1/04/06,22/04/06,27/04/06,03/05/06 &08/05/06 (5 கட்டம்)
கேரளா 22/04/06,29/04/06 & 03/05/06 (மூன்று கட்டம்)
பாண்டிச்சேரி 03/05/06 & 08/05/06( 2 கட்டம்)
மே மாதம் 11ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் வாக்குகள் எண்ணப்படும்.

இனி code of conduct நடைமுறைக்கு வரும்.

அனைத்து கட்சியினருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

5 மறுமொழிகள்:

ENNAR கூறுகிறார்

இன்னமும் வாக்காளர் அடைனயாள அட்டை தயாராக வில்லை நடந்து கொண்டிருக்கிறது.

நிலா கூறுகிறார்

You are tagged:

http://nilaraj.blogspot.com/2006/03/blog-post_03.html

மணியன் கூறுகிறார்

வருகைக்கு என்னார் அவர்களுக்கும் நிலா அவர்களுக்கும் நன்றிகள்.

Ram.K கூறுகிறார்

//அனைத்து கட்சியினருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

எல்லாருக்கும் வாழ்த்துக்கள் சரிதான். எல்லாரும் வெற்றிபெற்றுவிட்டால்?

:))

மணியன் கூறுகிறார்

நன்றி ராம்பிரசாத்( பச்சோந்தி).
வாழ்த்துவது நமது கையில், வெற்றி பெறுவது மக்கள் கையில். :))