புதுசு, இது புதுசு!


புத்தாண்டு பிறப்பிற்கும் பொங்கலுக்கும் வீட்டு மராமத்து செய்து புது வண்ணம் கொடுப்பார்கள். வேண்டாதவற்றை போகிப் பண்டிகையின் போது கழிப்பதும் வழக்கம். அந்த உணர்வுடன் எனது பதிவை பழைய ப்ளாக்கரிலிருந்து புது ப்ளாக்கரின் கணக்கிற்கு மாற்றியுள்ளேன். ஆனால் அந்த அடைப்பலகையை கையாள இன்னும் பொன்ஸ் வகுப்பை எதிர்நோக்கியிருப்பதால் புது மொந்தையில் பழைய கள்தான்.

தமிழ்மணத்தில் சேர்கிறதா என்று சோதிப்பதற்கும் இந்த இடுகை.

9 மறுமொழிகள்:

மணியன் கூறுகிறார்

சோட்தனை பின்னூட்டம்.

குமரன் (Kumaran) கூறுகிறார்

தமிழ்மணத்தில் சேர்ந்ததா இல்லையா?

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி குமரன். தமிழ்மணத்தில் சேர்ப்பதில் சிறு பிரச்சினை உள்ளது. நாம் 'அனுப்பு'ம் முன்னரே ' வகைபடுத்தாதவை' என்று சேர்ந்து விடுகிறது. அண்மையில் மறுமொழியிட்ட பதிவுகளில் refresh ஆகிறது.

இன்னும் classic அடைப்பலகையில் தான் இருக்கிறேன். புதிய வசதிகளை பயன்படுத்த வேண்டுமானால் தமிழ்மண ஜாவா நிரலியை மாற்றி ஒட்ட வேண்டும். அப்போதுதான் உண்மையான பிரச்சினைகள் தெரிய வரும்.

மாறவிருப்பவர்களுக்கு: முதலில் உங்கள் பழைய பிளாகரின் அடைப்பலகையை நகல் எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள். பின் புதிய பிளாகருக்கு மாற்ற அனுமதி கொடுங்கள். மாற உங்கள் இடுகைகளின் எண்ணிக்கையையும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையையும் பொறுத்து 2-3 மணிநேரம் ஆகிறது. மாறியதாக மின்னஞ்சல் வந்ததும் சென்று பார்த்தால் உங்கள் தனிப்பட்ட , முக்கியமாக தமிழாக்கம் செய்யப்பட்ட, மாற்றங்கள் வந்திருக்காது. அதனால் மீயுரை பெட்டியில் முழுதும் தேர்ந்தெடுத்து உங்கள் பழைய அடைப்பலகை நகலை ஒட்டவும். இப்போது புதிய பிளாக்காரில் உங்கள் பழைய பதிவு அதேபோல வந்து விடும். முக்கியமாக customise template செய்யக்கூடாது.

ramachandranusha(உஷா) கூறுகிறார்

மணியன் ஏன் பழைய வூட்டிலேயே இருந்தால் என்ன? பயந்து, வெல வெலத்துப் போய் ஓவென்று அழுத்துக்கொண்டே கேட்கிறேன், பொன்ஸ் பதில் கொடு கண்ணே!

மணியன் கூறுகிறார்

உஷா மேடம், பிளாக்கர் அனுமதிக்கும் வரை பழைய வூட்டிலியே இருந்து கொள்ளலாம்.

எனக்கு அவர்கள் "மாறிக்கொள் மாறிக்கொள்" என்று ஒவ்வொருமுறை உள்புகும் போதும் கொடுத்த ரவுஸ் தாங்கமுடியாமல்தான் மாறிவிட்டேன்.

டிபிஆர்.ஜோசப் கூறுகிறார்

மணியன் பழசே ஒழுங்கா வேலை செய்யும்போது எதுக்கு புதுசு?

இருக்கறதே போறும்னு இருந்துட்டா பிரச்சினையே இல்லையே!

அதுவுமில்லாம புதுசுல பெருசா ஒன்னும் சலுகைகள் (features) இல்லை போலிருக்கிறது.

ஆகவேதான் ப்ளாக்கர் எத்தனை முறை மாறு என்றாலும் மாறுவதாக இல்லை.. அதாவது, இப்போதைக்கு:)

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

மணியன்,
உங்கள் பதிவைப் பார்த்தபின் புது பிளாக்கர் வார்ப்புருவுக்கு மாறுவது எப்படி? என்று ஒரு பதிவு போட்டிருக்கேன்.. ஒரு விளம்பரம் ப்ளீஸ்...

ஹி ஹி.. நானே இன்னும் தமிழ்மணத்தில் சேரலை. அதான் :)))

மணியன் கூறுகிறார்

ஜோசஃப் சார், உங்கள் கைகளை (mouse ஐ) கட்டிக் கொண்டு எங்களை வேடிக்கைப் பாருங்கள் :) அவர்களாக மாற்றாதவரை மாறாமல் இருப்பது நலமே.

மணியன் கூறுகிறார்

பொன்ஸ், உங்கள் படிப் படியான வகுப்பு பயத்தைப் போக்கினாலும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை, இந்த வரிகளால்:

//ஹி ஹி.. நானே இன்னும் தமிழ்மணத்தில் சேரலை. அதான் :))) //

கொஞ்சம் பிளாகர் tagகளுக்கும் XML க்கும் பொருத்திக் கொடுங்களேன். நமது விருப்பு வெறுப்புகளை அடைப்பலகையில் மாற்றிக் கொள்ள பயனாக இருக்கும்.