தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

தீபாவளித் திருநாள்... கதிரவன் எழுமுன்னே படுக்கையிலிருந்து எழும் நாள். நாளும் ஒரு புத்தாடையா எனக் கடியும் தந்தையே அரசின் கடன், கோஆப்டெக்ஸ் தள்ளுபடியில் புத்தாடை அணிவித்து மகிழும் நாள். வருடத்தின் வியர்வை யெல்லாம் தொழிலாளர் போனஸாகப் பெறும் நாள். ஆண்டுமுழுமையும் செய்யும் விற்பனையில் 40 விழுக்காட்டை இருவாரங்களில் காணும் பொருளாதார திருவிழா. சிறுவர்களின் பட்டாசு வெடிப்பில் உற்சாகம் காணும் நாள்.முதல்நாள் முதல் காட்சிக்கு போட்டி போடும் 'மச்சிஸ்'. அம்மா செய்த MTR குலோப்ஜாமுனுடன் அடையாறு ஆனந்தபவன் கோதுமை அல்வா போட்டிபோடும் இனிப்புகளின் ஊர்வல நாள். மாமனாரின் தலையிலும் பட்ஜெட்டிலும் துண்டு போடும் தலை தீபாவளி திண்டாட்டங்கள்.

தீபாவளி என்றால் தீபங்களின் அணிவகுப்பு என்றிருக்க தமிழகத்தில் மட்டும் நாம் தீ கக்கும் பட்டாசுகளின் படையெடுப்பாக கொண்டாடுகிறோம். நரகாசுரனை கண்ணன் வெற்றி கொண்ட அமாவாசைக்கு முந்திய சதுர்தசி தினத்தில் அந்த அசுரனின் மரண தருவாய் ஆசையை நிறைவேற்றுமுகமாக தமிழகத்தில் கொண்டாடுகிறோம். இதை கேரளத்தில் தோல்வியை தழுவிய மகாபலியின் இறுதி ஆசை நிறைவேற்றுமுகமாக ஓணக் காலத்தில் மகாபலிக்கு வரவேற்பு நடத்துவதற்கு இணையாகக் கூறலாம். முக்கியமாக இந்நாளில் எந்த தனி பூசையும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

இங்கெல்லாம் இன்றிலிருந்தே தீபாவளி துவங்கி விட்டது. முதல்நாளான இன்று தன் திரஸ் என்று நம்மூர் அட்சய திருதியை போல கொண்டாடுகிறார்கள். தங்கமும் வைரமும் வாங்க கடைகளில் ஒரே கூட்டம். தீபாவளியை அமாவாசை இரவன்று தீபங்களை ஏற்றி இலக்குமி பூசை செய்து கொண்டாடுகிறார்கள். தவிர இராமன் ஜெயராமனாக அயோத்தி திரும்பிய தினமாகக் கொண்டாடுகிறார்கள். கொல்கொத்தாவில் இது காளிபூஜா.சீக்கியர்கள் தங்கள் குரு ஹர்கோபிந்த்ஜி குவாலியர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள். விக்கிபீடியாவில் இது பற்றி ஒரு சுவையான கதை கூறப் பட்டுள்ளது.குஜராத்திகளுக்கும் ஜைனர்களுக்கும் இன்று புத்தாண்டு தினம். ஜைனர்கள் மகாவீரரின் மோட்சநாளாகவும் கொண்டாடுகிறார்கள்.

எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !! கூடவே நமது நோன்பிருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரம்ஜான் வாழ்த்துக்கள்!!

16 மறுமொழிகள்:

வல்லிசிம்ஹன் கூறுகிறார்

நன்றி மணியன். உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

பொன்னும் பொருளும் அருளும்
நிறைந்து வாழ வேண்டும்.

சிவமுருகன் கூறுகிறார்

தீபாவளி நல்வாழ்த்துக்கள் மணியன் சார்.

ungal cram கூறுகிறார்

Hi

I welcome you to my startup's new service, www.pdstext.com. It is an online Tamil text editor in Unicode.

You can also search Google, Yahoo! and MSN in Tamil from within the site.

I look forward to your feedback and suggestions. Please spread the word if you like the service.

Regards

C Ramesh

ஜோ/Joe கூறுகிறார்

வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினர்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன், சிவமுருகன்.

Ramesh, eventhough yours is of the genre spam, I published the same for spreading the word.

பழூர் கார்த்தி கூறுகிறார்

:-)))o

தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!

:-)))o

அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்

துளசி கோபால் கூறுகிறார்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பான
இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

மணியன் கூறுகிறார்

ஜோ, சோம்பேறி பையன், துளசி கோபால்: உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

தீபாவளி வாழ்த்துக்கள் மணியன்..

வலையுலக நண்பர்களுக்கும் இந்தப் பின்னூட்டம் மூலமாக தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன்..

வேந்தன் கூறுகிறார்

எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

மணியன் கூறுகிறார்

பொன்ஸ்: உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் [GK] கூறுகிறார்

//எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !! கூடவே நமது நோன்பிருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரம்ஜான் வாழ்த்துக்கள்!! //

மணியன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !

மணியன் கூறுகிறார்

வருகை தந்து வாழ்த்திய வேந்தனுக்கும் கோவி. கண்ணனுக்கும் நன்றி.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!

Boston Bala கூறுகிறார்

இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) கூறுகிறார்

தீபாவளி நல்வாழ்த்துகள் மணியன் ஐயா.

மணியன் கூறுகிறார்

நன்றி பாபா மற்றும் குமரன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!