கூகிள் மீது வழக்கு

மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வில் கூகிளின் சமூக வலையகமான 'ஆர்குட்' (Orkut) மீது உள்ளூர் வழக்கறிஞர் யுகாந்த் இந்தியா மீது வெறுப்பை பரப்புவதாக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மாண்புமிகு ஏ.பி. தேஷ்பாண்டே மற்றும் ஆர்.எம். போர்டே, மகாராஷ்ட்ர அரசை கூகிளுக்கு நோடீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. இந்திய மூவர்ணக் கொடியை எரிக்கும் படத்துடன் இந்திய எதிர்ப்பு வாசகங்களை கொண்ட "We hate India" சமூககுழு உருவாக்கப் பட்டிருப்பதாக வழக்குமனு கூறுகிறது. அந்த மனுவில் தகவல் நுட்ப சட்டம் -2005ன் கீழ் ஒரு "controller" நியமிக்கப் பட்டு இத்தகைய குழுக்களை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
நன்றி:DNA News
மேலதிக தகவல்களுக்கு பார்க்க: ஆங்கிலப்பதிவு 1, ஆங்கிலப்பதிவு 2

7 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

இன்னும் கொஞ்சம் தகவல்கள் இங்க இருக்கு.. இதிலும் உதயகுமாரின் பின்னூட்டங்கள் இன்னும் அதிக விவரச் செறிவானவை..

லெனின் பொன்னுசாமி கூறுகிறார்

நல்ல பதிவு..!

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ். பாலபாரதியின் பதிவும் உதயகுமாரின் பின்னூட்டங்களும் ஆர்குட் பற்றியும் இந்த குழுக்கள் பற்றியும் நல்ல அலசலைத் தருகிறது. சுட்டியதற்கு நன்றி.

வருகைக்கு நன்றி பூக்குட்டி.

நாடோடி கூறுகிறார்

இதுதான் அந்த குருப்
this community is doing support to kashmir terroist so report it as bouge.and forward to your all friends.we need 1000 report to supend this activities.
to report
இங்கு complaint செய்யவும்

இதை orkutlல என் friends circleக்கு சில நாட்களுக்கு முன் அனுப்பி இருந்தேன். இதே போல் அனைவரும் complaint(1000) செய்தால் அதை நீக்க முடியும்.

இது மாதிரி கர்நாடாகவிலிருந்து தமிழை எதிர்த்து போலியா தகவல்களுடன் ஒரு குருப் உள்ளது. அது பத்தி நான் ஒரு பதிவு போட்டுயுள்ளேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க நாடோடி. உங்கள் profile சென்றால் என் பெயர் வருவதைக் கண்டு அதிர்ந்தேன். நாமிருவரும் ஒரே பெயர் கொண்டிருப்பது குழப்பம் விளைவிக்காமல் இருக்க நாடோடியாக திரிவதற்கு என் நன்றிகள். நாடோடி என்று நகைச்சுவையாக எழுதிய எழுத்தாளரை ஞாபகப் படுத்துகிறீர்கள் !

நான் ஆர்குட் உறுப்பினர் இல்லாததால் உங்கள் சுட்டிகளை பின் தொடர முடியவில்லை. இருப்பினும் குறை பதிந்து கொண்டிருப்பது வேண்டாத வேலை என்று தோன்றுகிறது. இந்த வழக்கினால் கூட என்ன சாதிக்க முடியும் ?

நாடோடி கூறுகிறார்

என்னோட பெயரும், தங்கள் பெயரும் ஒன்றாக இருப்பதால் தாங்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தீர்கள்.

Orkut என்பது ஒரு friendship வலை. In this people with same thoughts can join the communities and share their knowledge. If it is used for good things like Technical knowledge sharing it will usefull for every one. even you can find a group name of "Hacking" but for knowledge sharing. But some people doing wrong thing by using this. if any one find it is wrong and if they complaint about this google will take action.

மணியன் கூறுகிறார்

நாடோடி, உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நுட்பங்கள் கத்தி போன்றவை. அவை நல்லவைக்கும் பயன்படும். அல்லவைக்கும் பயன்படும்.