'ஆறு'வது சினம்!


யாழிசைசெல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு நண்பர் சுகா அழைத்திருக்கிறார்். தமிழ்மணத்தின் அண்மைக்கால பதிவர்களுக்கு இது தங்கள் விருப்ப வெறுப்புகளை பதிய நல்ல வாய்ப்பு. ஆனால் இதன் முந்தைய பதிப்பான நவ்வாலு விளையாட்டில் பங்கேற்றவர்களுக்கு இது ஒரு மீள்நினைவே என்பதால் புதியவர்களின் ஆறு பதிவுகளைக் காணவே விருப்பம். என்னுடைய நாலு பதிவு இங்கே. அதில் விடுபட்டவை சிலவற்றை மட்டும் பதிகிறேன்.

அ. அறிமுகமான ஞாபகம் கொள்ளும் தமிழ்க் கவிகள்:
1. வள்ளுவன்
2. கம்பன்
2. சமயக்குரவர் நால்வர்
3. அருணகிரி
4. வள்ளலார்
5. அபிராமி பட்டர்
6. பாரதி

ஆ.திரைப்பட கவிஞர்கள்
1. கண்ணதாசன்
2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3. உடுமலை நாராயணகவி
4. வாலி
5. வைரமுத்து
6. தாமரை

இ.மறக்கமுடியாத நூல்கள்
1. பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்
2. துப்பறியும் சாம்பு (Comics)
3. தேவனின் நாவல்கள்
4. கென்னடியின் கதை - மயன்
5. சுஜாதா தொடர்கள்
6. வாஷிங்டனில் திருமனம் - சாவி

ஈ. பிடித்த உணவு - தேவையா ?
1. இட்லி
2. தோசை
3. சன்னா படூரா
4. ஆலு தம்
5. மகாராஷ்ட்ராவின் போகா (அவல் உப்புமா)
6. கேரள கரிமீன் fish fry

உ.போகவிரும்பும் இடங்கள்
1. அந்தமான் தீவுகள்
2. காஷ்மீர்
3. அருணாச்சல்பிரதேசம்
4. ஆஸ்திரேலியா, நியூசி
5. தென்னாப்பிரிக்கா
6. வான்வெளி (Outer Space)

ஊ. வலையில் அடிக்கடி போகுமிடம்..
1. கூகுள்
2. யாகூ,ஜிமெயில் மின்னஞ்சல் சேவைகள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு
5. /.
6. விக்கிபீடியா

எ. பொழுது போக்கு..
1. தொலைகாட்சி பார்ப்பது..
2. குடும்பத்தினருடன் சிற்றுலா (picnic) செல்வது
3. திரைப்படம் செல்வது
4. மால்(Mall)களை நோட்டம் விடுவது
5. வீட்டை சீரமைப்பது ( டோண்டுவின் ஒழிப்பது)
6. வலை மேய்வது

ஏ. அடிக்கடி போகும் வலைப் பதிவுகள்
1. பத்ரி
2. துளசி
3. டி.பி.ஆர் என்னுலகம்
4. ராமச்சந்திரன்உஷா
5. பெனாத்தலார்
6. ஜி.இராகவன்/குமரன்

ஐ. மேலும் சில வலைப் பதிவுகள்:
1.இட்லி-வடை
2. பொன்ஸ்
3.சிவமுருகன்
4. இளவஞ்சி
5. ராசா
6. $elvan


நான் அழைக்க விரும்பும் ஆறு பேர்:
1. சிவமுருகன்
2. மலைநாடான்
3. வெளிகண்டநாதர்
4. நிலா
5. துபாய்ராஜா
6. ஜெயராமன்

18 மறுமொழிகள்:

Suka கூறுகிறார்

அருமை மணியன்.

கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு நான் அடிமை :) நூறு முறையாவது படித்திருப்பேன்...

பர்கரையும் சாண்ட்விச்சையும் சாப்பிட்டு இப்போ இட்லி தோசை எல்லாம் மாவால் ஆன சொர்க்கம் தான் போங்க..

வாழ்த்துக்கள்
சுகா

Suka கூறுகிறார்

நேரம் ஒதுக்கி பதிவிட்டதற்கு நன்றிகளும் கூட.

சுகா

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் உடனுக்குடன் பின்னூட்டியமைக்கும் நன்றி சுகா.

VSK கூறுகிறார்

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதேனும் கோபமாகச் சொல்லப்போகிறீர்களோ என நினைத்தென்.

ஆனால், சிரிக்க, சிந்திக்க, சுவைக்க வைக்கும் பதிவைப் போட்டிருக்கிறீர்கள்! [

வெற்றி கூறுகிறார்

மணியன் அய்யா,

//ஊ. வலையில் அடிக்கடி போகுமிடம்..
1. கூகுள்
2. யாகூ,ஜிமெயில் மின்னஞ்சல் சேவைகள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு
5. /.
6. விக்கிபீடியா//

நீங்கள் 5வதாக குறிப்பிட்டுள்ள /. புரியவில்லையே?
/. = current தளம் = தமிழ்மணம் ?

நன்றி.

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

மணியன், விட்டுப் போனதே இவ்வளவு இருக்கா? அடுத்து எட்டுப் பதிவு ஒண்ணு தொடங்கினாக் கூட உங்க கிட்ட விஷயம் இருக்கும் போலிருக்கே!!
நம்ம பதிவையும் எழுதினதுக்கு நன்றி :)

மணியன் கூறுகிறார்

வாங்க எஸ் கே.
//தலைப்பைப் பார்த்தவுடன் ஏதேனும் கோபமாகச் சொல்லப்போகிறீர்களோ என நினைத்தேன்.//

முதலிலேயே நாலு பதிவு போட்டாச்சு; இப்ப ஆறு வேறயா என அதைப் படித்தவர்கள் கோபிக்கப் போகிறார்களே என சமாதானப் படுத்தவே....

மணியன் கூறுகிறார்

வாங்க வெற்றி.
//நீங்கள் 5வதாக குறிப்பிட்டுள்ள /. புரியவில்லையே?
/. = current தளம் = தமிழ்மணம் ?//

அந்த தளம் Slashdot கணினி பைத்தியங்கள் (Nerds) சண்டை போடும் தளம். என்ன, அந்த சண்டைகள் கொஞ்சம் கண்ணியமாக என்றில்லாவிடினும் கர்ணகடூரமாக இருக்காது.

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ். பட்டியல் இடுவது என்னங்க பெரியது, உங்களைப் போல நாலு வரி எழுதவேண்டும் என்றால் தானே தெரியும்.:))

மணியன் கூறுகிறார்

முகப்பில் இருக்கும் விளையாட்டை யாராவது விளையாடியிருக்கிறீர்களா?

நாகை சிவா கூறுகிறார்

நன்றாக பட்டியல் இட்டு உள்ளீர்க்கள் மணியன். முகப்பில் இருப்பது என்ன விளையாட்டு....... தாயக்கட்டை கொண்டு விளையாடும் விளையாட்டா?.........

மணியன் கூறுகிறார்

வாங்க நாகைசிவா, அது KDE (Linux) தளத்தில் இயங்கும் Six என்ற விளையாட்டு

Six is a Hex playing program for KDE.Hex is great game. It belongs to the family of connectivity games. Its simple rules and deep strategic complexity make it a true classic.

சிவமுருகன் கூறுகிறார்

சீக்கிரமே பதிக்கிறேன்.

அழைப்பிற்க்கு நன்றி.

மணியன் கூறுகிறார்

வருக சிவமுருகன். உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

Ram.K கூறுகிறார்

பிடித்த சாப்பாடு வகைகள் உங்கள் ரசனையை வெளிப்படுத்துவதாக எண்ணுகிறேன்.

:)

பசியுடன்
பச்சோந்தி

மணியன் கூறுகிறார்

ராம்பிரசாத், உங்களுடையது நக்கலா பாராட்டா எனத் தெரியவில்லை. மனோதத்துவம் படித்தவர், உண்மைதான் சொல்லியிருப்பீர்கள் :)

Unknown கூறுகிறார்

"ஆறு"வது சினம்
கூறுவது தமிழ்(நீங்கள்)

மணியன் கூறுகிறார்

//"ஆறு"வது சினம்
கூறுவது தமிழ்(நீங்கள்)//
அறியாத சிறுவனா ($ல்வனா ) நீர் !