கலாம் தோ கமால் ஹை!!

என்ன, ரொம்பநாளாகி விட்டதே என்று நமது குடியரசுத் தலைவரின் வானகச் சாதனையை பதியலாம் என கடந்த இரண்டு நாட்களாக முயன்று பிளாக்கர் தடுக்கியது. இன்றாவது பதிகிறதா எனப் பார்க்கிறேன். அட, வேறு யாரும் இதனை பதிந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது சிறிது வருத்தமே.

அதிபர் APJ அப்துல் கலாம் அவர்கள் இன்று (08/06/06) காலை இந்தியன் விமானப் படையின் அதிநவீன சுக்கோய்-30 ரக சண்டை விமானத்தில் புனேயின் லோஹெகான் விமானதாவளத்திலிருந்து பறந்து சரித்திரம் படைத்திருக்கிறார். இந்திய முப்படைகளின் சுப்ரீம் தளபதியான இந்திய ஜனாதிபதி இந்த காற்றில் ஒலியின் வேகத்தை விட வேகமாக செல்லக் கூடிய நவீன விமானத்தில் விங் கமாண்டர் அஜய் ரத்தோரின் உடன் செல்லும் மாலுமியாக 30 நிமிட வான்பயணம் (Sortie) மேற்கொண்டார். இச்சாதனை மூலம் ஒரு இந்திய விமானப்படையின் சண்டைவிமானத்தில் முதலில் பயணித்த மிக வயதான இந்திய குடிமகன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதேபோல உலகின் மிக உயர்ந்த சண்டைப் பிரதேசமான சியாச்சென் பனிச் சிகரத்தை எட்டி போர்வீரர்களுடன் கலந்து கொண்ட, இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் சென்று கடலின் ஆழம் கண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இராணுவம்,விமானப்படை, கப்பற்படை என மூன்று படைகளிலும் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் மூட்டியும் இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழும் அப்துல் கலாம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் வந்தனங்களும் இவ்விடுகை மூலம் தெரியப் படுத்துவோம். சலாம் நமஸ்தே, கலாம்!!

15 மறுமொழிகள்:

துளசி கோபால் கூறுகிறார்

நல்ல நியூஸ் .

கலாம் தோ சச்முச் கமால் ஹை.

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

நம்ம அப்துல் கலாமுக்கு நானும் ஒரு சலாம் போட்டுடுறேன், மணியன்!

மணியன் கூறுகிறார்

வாங்க துளசியக்கா, நிச்சயம் அவர் ஒரு மாறுபட்ட குடியரசுத் தலைவர் என்பதை அடிக்கடி உணர்த்தி வருகிறார்.

மணியன் கூறுகிறார்

நன்றி வெளிகண்டநாதர்.

மணியன் கூறுகிறார்

வாங்க சதயம், எந்த ஒரு இழுபறியிலும் மாட்டாது நமது இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் கலாம் அவர்களுக்கு நிச்சயம் இன்னொரு வாய்ப்பு வழங்கப் படவேண்டும். அதிலும் மைய அரசிலும் மாநில அரசிலும் தமிழுணர்வுள்ளவர்கள் வலுவடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் இது சாத்தியப் பட வேண்டும்.

வவ்வால் கூறுகிறார்

வணக்கம் மணியன்!

திரு.அப்துல் கலாம் ஒரு வித்தியாசமான இந்திய அதிபர் உண்மையில் போற்றுதற்குரியவர்!தொலைக்காட்சியில் செய்தி வந்ததுமே உடனே நானும் ஒரு பதிவு இது குறித்து போட்டுவிட்டேன்! :-)

மேலும் M.TV இன் யூத் ஐகான்-2006 என்ற போட்டிக்கு திரு கலாம் அவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் M.TV இன் சைட்டில், அதற்கான சுட்டி :http://www.mtvindia.com/mtv/mymtv/events/youthicon

மணியன் கூறுகிறார்

ஆஹா, இப்போதுதான் நிம்மதி. என்னடா, இந்த செய்தியை ஒருவரும் பதியவில்லையே என வருந்தியிருந்தேன். உங்கள் இடுகையை பார்க்கவில்லை. நீங்கள் சொன்னபடி MTVயில் ஓட்டு போட எனக்கு வயது அதிகம். இருந்தாலும் நல்ல காரியத்திற்கு என்று 'கள்ள'ஓட்டு போட்டுவிட்டேன்;)
இவ்விடுகையை பார்வையிடும் இளைஞர்கள் (யாராவது இருந்தால்??!!)இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி நானும் வேண்டுகிறேன்.

வவ்வால் கூறுகிறார்

வணக்கம் மணியன்!

தாங்கள் வாக்களித்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன் ,திரு.கலாம் போன்றவர்களை தேர்வு செய்யாமல் போய்விட்டால் அது நம் மக்களின் அறியாமையாக போய்விடும்.தாங்கள் வாக்களித்தது தவறே இல்லை! நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் திரு.கலாம் அவர்களுக்காக சொல்லி வருகிறேன் ,யாரொ ஒரு திரை நட்சத்திரம் ,சின்னதிரை வர்ணனையாளர் விட கலாம் வருவது தான் சரியான தேர்வாக இருக்க கூடும்!

நாகை சிவா கூறுகிறார்

மணியன், தாங்கள் கூறியது போல் இளைஞன் வந்து விட்டேன். ஒட்டையும் பதிந்து விட்டேன். கலாம் பயணம் செய்த விசயம் வேலைப் பளுவின் காரணமாக தாமதமாக தான் தெரிந்தது. இதை குறித்து பலரும் பதிவு போட்டு இருப்பார்க்கள் என எண்ணி கலாமுக்கு ஒரு சலாம் என்று மட்டும் என் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். விஜயம் செய்து காணவும்.
"கலாம் ஒரு வாழும் வழிக்காட்டி என்பதில் எள்ளவும் யாருக்கும் சந்தேகம் கிடையாது."

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் MTV ஓட்டிற்கும் நன்றி நாகை சிவா. உங்கள் வேலைப்பளுவிலும் எல்லா செய்திகளையும் கமென்ட் அடித்திருக்கிறீர்களே! உங்கள் சூடான் அனுபவங்கள் சீரியல் என்று அரம்பிக்கப் போகிறீர்கள் ?

நாகை சிவா கூறுகிறார்

விரைவில் எழுதிவிடுவோம் மணியன் அவர்களே!

நாகை சிவா கூறுகிறார்

Please Check this Link.

http://tsivaram.blogspot.com/2006/06/mtv-2006.html

Thanks

Suka கூறுகிறார்

அருமை .. குடியரசுத்தலைவர் இப்படியா !!

மணியன்,

http://sukas.blogspot.com/2006/06/blog-post_15.html

இந்த விளையாட்டுக்கு வாங்க.. நான் தான் அநியாயத்துக்கு சுருக்கி எழுதீட்டேன்.. நீங்களாவது நல்லா எழுதுங்க..

மணியன் கூறுகிறார்

நிச்சயம் எழுதுங்கள் நாகை சிவா. நான் வெளியூர் போய் இருந்தால் உடனே பதிப்பிக்க முடியவில்லை. உங்கள் பதிவும் பார்த்தேன். மிக விரிவாக MTV ஐகான்களை விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.

மணியன் கூறுகிறார்

வாங்க சுகா, மீண்டும் ஒரு ஆறா ? முதலில் நம்ம நாலில் ஆரம்பித்த சுயம்தேடல் பின்னால் நட்சத்திர வாரத்தில் சுய புராணமாகி இப்போது தொடரச் சொல்கிறீர்கள். செய்து விட்டால் போகிறது.நன்றி.