பீஹாரில் ஒரு French புரட்சி ?

கடந்த ஞாயிறு அன்று பீஹாரின் ஜெஹானாபாத்தில் நடந்தேறியுள்ள சிறை உடைப்பு வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்க வியலாது. லாலு மற்றும் பூடாசிங் எதிர்ப்பாளர்களுக்கு வாயில் மெல்ல அவல் கிடைத்தாலும் இந்நிலைக்கு பீஹாரின் அனைத்து அரசியல் மற்றும் சமூகவியலாரும் பொறுப்பேற்க வேண்டும். இந்திய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பட்ட அரசுகள் ஆட்சி புரிந்த மகதத்தில் இன்றைய தினம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியே இதற்கு காரணம். பத்து பன்னிரண்டு தீவிரவாதிகள் சிறையை மீட்பதற்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செயலில் இறங்குவதற்கும் எத்துணை வித்தியாசம் ? நக்ஸல்வாதிகள் அடிப்படையில் பரவியுள்ள நோயின் அறிகுறியேயாகும். சுதந்திர இந்தியாவில் இன்னும் நிலச்சுவாந்தார்கள் தனிப் படையுடன் வரும் அட்டகாசம் பீஹாரில் மட்டுமே நிலவுகிறது. லூயி IV மற்றும் மேரி அரசிபோல என்ன உண்மை நிலை என்று கவலைப்படாமல், அரசியல்வாதிகளும் தங்கள் பதவிகளையும் தேர்தல்களையும் கைப்பற்ற மக்களை ஜாதி, மதம் என்று சீட்டுக்கட்டு நிறங்களாக எண்ணி ரம்மி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்; எனக்கு MY சேர்ந்திருக்கிறது, உனக்கு DY சேர்ந்திருக்கிறதாஎன்று. இன்று நோய் முற்றி பாஸ்டைல் சிறை உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. நக்ஸலைட் இயக்கம் ஆரம்பித்த வங்காளத்தில் இன்று அமைதி நிலவுகிறதென்றால் நிலையான அரசும், சமுகாய அக்கறையும் தான் என்று தோன்றுகிறது. நோய் நாடி நோய் முதல் நாடி வைத்தியம் செய்ய அரசும் தன்னார்வ அமைப்புக்களும் முன் வருமா ?

4 மறுமொழிகள்:

~Nandalala~ கூறுகிறார்

பதிவுக்கு நன்றி.

'ருஷ்ய புரட்சி' நடந்த நவ 13ஐ கவனிக்கவும்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி நந்தலாலா. ருஷ்ய புரட்சி அக்டோபர் புரட்சி என்றுதானே அறியப்படுகிறது.

b கூறுகிறார்

நானும் படிக்க பார்க்க நேர்ந்தது. சட்டம் ஒழுங்கு அந்த அளவுக்கு இருந்திருக்கிறது.

சந்திப்பு கூறுகிறார்

மணி! தங்களது கருத்து மிகச் சரியானது. விமர்சனபூர்வமாக அணுகியுள்ளீர்கள். இப்பிரச்சினையை. உண்மைதான் நக்சல்கள் சாகசவாதிகாளத்தான் இருக்கிறார்களே ஒழிய, பெரும் பகுதி மக்களுடன் இணைந்து மக்கள் இயக்கமாக கட்டுவதற்கு தயாராக இல்லை. மேற்குவங்க உதாரணம் மிகப் பொருத்தமானது.
கே. செல்வப்பெருமாள்