ரட்சாபந்தன் கயிற்றில் ரட்சை உண்டா ?

நாளை வட இந்தியர்கள் இரட்சாபந்தன் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ஆவணிமாத முழுநிலவில் சகோதரிகள் தங்களைக் காப்பாற்றும் சகோதரர்களின் 'இரட்சைக்காக' காப்புக் கயிறு கட்டுவதே இப்பண்டிகையின் சிறப்பாகும். சகோதர்களும் சளைக்காமல் பதில் பரிசுகள் தருவதும் வழக்கமே. வணிகமயமான உலகில் இது போல ஒரு வாய்ப்பை நழுவ விடுவார்களா ? வண்ணமயமான காப்புக்கயிறுகள் பலவித உருவங்களுடன் ரூ.20 இலிருந்து ரூ.450 வரை விற்பனையாகின்றன. இவற்றின் பின் இருக்கும் அபாயத்தை பயனர்கள் முழுவதும் அறிவார்களா என
இந்த DNA செய்தி - Beware of these rakhis - Daily News & Analysis கேட்கிறது.

பரம்பரை இராக்கி சாதாரண கயிற்றில் மணி கோர்த்தது. ஆனால் தற்போதைய ராக்கியில் அழகான பொம்மை உருவங்கள், கார்ட்டூன் வடிவங்கள்,் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 'பிராண்ட்' பெற்ற பொம்மைகளே ஈயம் கலந்து நச்சுத்தன்மை பெற்றிருப்பதாக அறிக்கை வரும்போது வருமிடம் தெரியாத இவற்றின் தரம் பற்றி ஏதும் தெரியாது. முக்கியமாக குழந்தைகளைக் கவரும் வண்ணங்களில் வரும் இவற்றில் உள்ள ஈயம கலந்த வண்ணம்் அவர்கள் உட்கொள்வதானால் அவர்களது மூளை வளர்ச்சியை அது பாதிக்கும் என அது எச்சரிக்கிறது.

நமது தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றன ? கோலாவின் நச்சுத்தனமையை வெளிக்கொணர்ந்த ஆய்வுநிலையங்கள் எங்கே போயின ?

2 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் கூறுகிறார்

மணியன்,

சீசன் சமயத்தில் ராக்கியை இந்திய மார்கெட்டில் விட்டால் பணத்தை அள்ளலாம் என்று சீனாவுக்கு தெரிந்திருக்கிறது.

மிதமிஞ்சிய மக்கள் சக்தியை வைத்துக் கொண்டு நாம் இறக்குமதி செய்கிறோம். வெட்கக் கேடு.

அதெல்லாம் சரி, சீனாவில் இருந்து பொருள்களை பெற கம்யூனிஸ்ட் தடைவிதிக்குமா ?
:))

மணியன் கூறுகிறார்

வாங்க கோவி.கண்ணன். சீனாவிலிருந்து போக்மான் மற்றும் அனுமான் பொம்மைகள் வந்துள்ளன. தவிர விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் பொம்மைகூட இறக்குமதியாவதாகச் செய்தி. இனி நம் மண்வினை கலைஞர்கள் பாடு திண்டாட்டம்தான்.