வெள்ளை மாளிகையில் நம் குயில்!!

வருடக் கடைசி வந்து கொண்டிருக்கிறது. நமக்காகவோ நமது வாடிக்கையாளர்களுக்காகவோ நாட்குறிப்பு புத்தகங்கள் வாங்க எந்த புத்தகநிலயத்திற்கு சென்றாலும் நம்மைக் கவருவது நைட்டிங்கேல் நாட்குறிப்பு புத்தகங்கள் (டயரி) தான். சிவகாசியில் தயாரிக்கப்படும் நைட்டிங்கேல் எழுதுபொருட்கள் இன்று உலகெங்கும் விற்கப் படுகின்றன.அதன் விற்பனை ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.

"எங்கள் எழுதுபொருட்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் வெள்ளை மாளிகைக்கும் விற்கப்படுகின்றன" எனப் பெருமைப் படும் இந்நிறுவனத்தை (ஸ்ரீநிவாஸ் ஃபைன் ஆர்ட்ஸ் (பி) லிமிடேட்) திரு ஆர். சொக்கலிங்கம் அவர்கள் 1964இல் துணிமணிகளுக்கான லேபல் அச்சடிக்க ஆரம்பித்தார். சிலவருடங்களிலேயே தமது மகன் திரு.இராஜேஷை இங்கிலாந்திற்கு அனுப்பி நவீன அச்சகமுறைகளில் பயிலச் செய்தார். தவிர ஜெர்மனியிலிருந்து 1.5கோடி பெருமான அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து தீப்பெட்டி லேபல்களையும் பட்டாசு லேபல்களையும் தயாரித்து வந்த சிவகாசியில் புரட்சி செய்தார். அவருடைய முன்னோக்கிய பார்வை இன்று பலனைத் தந்திருக்கிறது. மற்ற outsourcing போல, உலக வியாபாரங்களுக்கு அச்சடிக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

இந்த செய்தியை யாஹூ செய்தியில் கண்டவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இத்தகைய சாதனை படைப்போரே தமிழ்நாட்டை உலக பொருளாதாரத்தில் முன்னேடுத்துச் செல்பவர். அவர்தம் எண்ணிக்கை வளர்க!!

16 மறுமொழிகள்:

Mouls கூறுகிறார்

நல்ல பதிவு....

ப்ரியன் கூறுகிறார்

நல்ல சேதி மணியன்

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

மணியன் கூறுகிறார்

Mouls மற்றும் ப்ரியன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறுகிறார்

சிறு துளி பெரு வெள்ளம்;;;இப்படி மெல்ல மெல்ல இந்தியா ஒளிரட்டும். சந்தோசமான செய்தி!
யோகன் பாரிஸ்

மணியன் கூறுகிறார்

நன்றி யோகன்.

கைப்புள்ள கூறுகிறார்

நல்ல செய்தி ஐயா!
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

குமரன் (Kumaran) கூறுகிறார்

நன்று நன்று.

நன்றி மணியன் ஐயா.

மணியன் கூறுகிறார்

நன்றி கைப்புள்ள & குமரன்.

வெற்றி கூறுகிறார்

படிக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்லதொரு தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

பரத் கூறுகிறார்

சிவகாசியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இண்டஸ்ட்ரியல் விசிடுக்காக(Industrial Visit) நைட்டிங்கேல் நோட்டு புத்தக தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள்.பலபேருக்கு சிவகாசி என்றால் பட்டாசு மட்டுமே நினவுக்கு வரும்.உண்மையில் "அச்சுத் தொழிலில்" அமைதியாக ஒரு புரட்சியையே நடத்திக்கொண்டிருக்கிறது இந்த குட்டிஜப்பான்.நல்ல செய்தி..பகிர்ந்தமைக்கு நன்றி

மணியன் கூறுகிறார்

வாங்க வெற்றி,பரத். அரசு உதவி செய்யாவிட்டாலும் தமிழ்நாட்டில் தொழில்முனைவோருக்கு வெற்றிகள் கிட்டுவது மகிழ்வைத் தருகிறது.

துளசி கோபால் கூறுகிறார்

நல்ல சேதி சொன்னதுக்கு நன்றி மணியன்.

Unknown கூறுகிறார்

நம் உற்பத்திப் பொருட்கள் உலக அளவில் பேசப்படுவது பெருமைக்குரிய செய்தியே!!

தெரியப் படுத்தியதற்கு நன்றிகள் மணியன்!

மணியன் கூறுகிறார்

நன்றி துளசியக்கா, அருட்பெருங்கோ.

Sudhakar Kasturi கூறுகிறார்

Very true Manian Sir! Nice and motivating info.
This enterprising spirit and the long term planning is what makes our GDP growing - DESPITE the government efforts to pull it down:)
Regards
K.Sudhakar

மணியன் கூறுகிறார்

நன்றி சுதாகர்.