காட்சிப் பதுமைகள்

மான்னெக்வின் (Mannequins) எனப்படும் காட்சிப்பதுமைகளை கண்ணாடி சிறைகளில் கடை வாயில்களில் கண்டிருப்போம். பெரும்பாலான நேரங்களில் அவை உண்மையான நபர்களோ என வியக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கும். கோவில் சிலைகளையும் காட்சிக்கூட சிற்பங்களையும் வியக்கும் நம்மால் கடைவாயில்களில் நம் கவனத்தை ஈர்க்கும் இப்பதுமைகளின் வடிவமைப்பாளரின் திறனை என்றேனும் சிந்திக்கத் தோன்றியுள்ளதா ? அவை எவ்வாறு உருவாக்கப் படுகின்றன என எண்ணியுள்ளோமா?


இக்காட்சிப்பதுமைகள் மற்ற சிலை வடிவங்களைப் போலன்றி எல்லா அவயங்களுமே மனித உடலின் உண்மையான அளவுகளில் இருக்கவேண்டும். அப்போதுதான் மனிதருக்கு உருவாக்கிய ஆடைகளை நேர்த்தியாக அணிவிக்க முடியும். எல்லா அளவுகளும் 5 மி.மிக்குள் முன்பின் இருக்கலாம். இல்லையேல் ஆடைகள் பல்லிளிக்கும். இதற்கு மேலாக அவை வாடிக்கையாளரை கவரும் அழகுடனும் ஆண்மையுடனும் இருக்க வேண்டும். இருபது வருடங்களாக இத்துறையில் வடிவமைத்துவரும் லென் கிஃப்பார்ட் (Len Gifford ), லொரென் (Lauren) என்ற மாடல்கலைஞரின் அச்சாக காட்சிப் பதுமை உருவாக்கியவிதத்தை கருத்துருவிலிருந்து காட்சிப்பொருள்வரை இங்கே பதிவாக்கியுள்ளார். அவரின் விவரப்படி 40 நாட்கள் இரவும் பகலுமாக உருவாக்கியிருக்கிறார்கள். நான் இணையத்தில் கண்டதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

2 மறுமொழிகள்:

லதா கூறுகிறார்

காட்சிப்பதுமைகளை வடிவமைப்பவர்கள் அதில் முகம் இல்லாமலோ அல்லது முகம் அதிகம் அழகாக இல்லாமல் எளிமையாக இருக்கும்வண்ணம் செய்வார்களாம். அப்படிச் செய்தால்தான் மக்கள் அந்தக் காட்சிப்பதுமைகளைப் பார்க்காமல் அவை அணிந்திருக்கும் ஆடைவகைகளைப் பார்ப்பார்களாம். (எங்கேயோ படித்தது)

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி லதா அவர்களே. உங்கள் சோதனை ஓட்டம் முடிந்ததா? வலைபதிக்க வாருங்கள்.

நீங்கள் சொல்வதும் சரியே. ஆயினும் பரந்த பல்வணிகக் கூடங்களில் நிஜ வடிவைத்தை ஒத்த காட்சிப்பதுமைகள் வேகமாக ஓடும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பயன்படுகின்றன.