இலசந்த விக்ரமதுங்கேயின் கடைசி கடிதம்
இலங்கை இராஜபக்சே அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து தனது உயிரை பணயம் வைத்த இலசந்த விக்ரமதுங்காவின் படுகொலையை ஒட்டி பிரித்தானிய இதழாளர் தனது பதிவில் எழுதியதை இன்று வந்த மின்னஞ்சலில் சுட்டி கிடைக்கப் பெற்று படிக்கும் வாய்ப்பு கிட்டியது. தாம் கொல்லப்பட விருப்பதை முன்னரே அறிந்திருந்த விக்ரமதுங்கா தனது இறப்பின் பின்னர் வெளியிட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதனை உள்ளடக்கிய அப்பதிவில் இலங்கை அரசின் ஆணவ மற்றும் அடக்குமுறை அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
தமது பதவிகளுக்காக குரல் கொடுக்கத் தயங்கும் தமிழக தலைவர்களை விட,சந்தர்ப்பவாத தமிழக இதழாளர்களை விட, தனது உயிரையே விலைகொடுத்து தனது இன அரசாயினும் இனபேரழிவிற்கு எதிராக எழுதிய இலசந்தே நினைவில் கொள்ளப்பட வேண்டியவராகத் தெரிகிறார்.
அந்த சுட்டியை பகிர்வதின் மூலம் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
5 மறுமொழிகள்:
அறியத்தந்தமைக்கு நன்றி மணியன் அவர்களே!
நானும் எனது அஞ்சலிகளை இங்கே பதிவு செய்கிறேன்!
இலசந்த விரமதுங்கே என்னும் அந்த மனித தெய்வத்தின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். நம்மினத்தவரை இழப்பதே பெரும் சோகம். அதை விடப் பெரிய சோகம் இலசந்த விரமதுங்கே பொன்ற நியாயவான்களை இழப்பது.
வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி அவர்களே !எனது வடமாநில நண்பர்களுக்கு இந்த மின்னஞ்சலே அவர்கள் கண்களைத் திறக்க உதவியது.நமது ஊடகங்களின் சார்புநிலையை அறியத் தந்தது.
வாங்க இராகவன்.சிபிக்குச் சொல்லியது போல இங்குள்ளவர்களுக்கு, சில தமிழ் நண்பர்கள் உட்பட, இவரது எழுத்துக்கள் உண்மைநிலையை எடுத்துரைத்தது. அல்லாது போனால் இலங்கை பிரச்சினையை அரசின் இறையாண்மைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தமாகவே நினைத்து வந்தனர். நமது தமிழ் பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் மற்ற இந்தியர்களிடம் ஈழப் பிரச்சினையின் முழுப் பரிணாமத்தை கொண்டு செல்லவில்லை :(
வாழ்த்துகள்
மறுமொழியிட