குமரனின் பேருருவம் !!

உயரமான அனுமன் சிலைகளை சுசீந்தரம், நாமக்கல், நங்கநல்லூர் மற்றும் நானிருக்கும் நெரூல் ( மும்பையின் புறநகர்) இங்கெல்லாம் கண்டிருக்கிறேன். குமரியில் அய்யன், ஹைதராபாத்தில் புத்தர்(அ)ஜைன குரு சிலைகளின் விஸ்வரூபத்தை வியந்திருக்கிறேன். கர்நாடகத்தின் சிரவண பெலகொலாவையும் கண்டு களித்திருக்கிறேன். இவ்வரிசையில் தமிழ்க் கடவுள் கந்தனுக்கும் உயரமான சிலை வடித்திருக்கிறார்கள், இங்கில்லை.. மலாயாவில்.


உலகிலேயே உயரமான முருகன் சிலை சென்ற ஞாயிறு ஜனவரி 29ம் நாள் மலேசியாவின் பாதூ குகை (Batu Caves) சுப்பிரமணியர் கோவில் நுழைவாயிலில் திறக்கப் பட்டது. மலேசிய அமைச்சர்கள் தாதுக் செரி சாமிவேலு, தாதுக் பழனிவேல் மற்றும் தாதுக் வீரசிங்கம் இத்திறப்பு விழாவில் பங்கேற்றனர். 42.7 மீ (128 அடி) உயரமுள்ள முருகன் சிலை 1550 கன மீட்டர் கொன்கிறீட்,250 டன் இரும்புக் கம்பிகள் மற்றும் 300 லிட்டர் தாய்லாந்து நாட்டிலிருந்து தங்கமுலாம் வண்ணக்குழம்பு ஆகியவை கொண்டு அமைக்கப் பட்டது. 15 இந்திய சிற்பகலைஞர்கள் மூன்று வருடம் 25 இலட்சம் மலேசிய ரூபாய் செலவில் உருவாக்கினர். கின்னஸின் உலக சாதனைப் பட்டியலில் உலகிலேயே உயரமான முருகன் சிலை என இடம் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

1981இல் நிறுவப்பட்ட இக்கோயில் தை பூச விழாவிற்கு பெயர் பெற்றது ( இவ்வருடம் பிப்.11ம் தேதி). அப்போது பல இலட்சம் மக்கள் ஒன்று திரண்டு கொண்டாடுவது காணக் கண்கொள்ளாக் காட்சியாம். 272 படிகள் கொண்ட இந்தக் கோவிலை இயற்கை அழகை பருகவும் செல்லலாம்.தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது.

10 மறுமொழிகள்:

rv கூறுகிறார்

batu பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

தைப்பூசமும், காவடியும் மிகவும் பிரசித்தம்.

முருகனின் முகமும் அழகாய் வந்திருக்கிறது.

படுதல மோங்கு கந்தவேளேன்னு யாராவது பாடவேண்டியதுதான் பாக்கி. நம்ம ஜிரா தான் இருக்காரே. சீக்கிரம் பாடிடுவார். :))

G.Ragavan கூறுகிறார்

ஆகா! என்று காணக் கிடைக்குமோ இந்த அற்புதக் காட்சி! கந்தா முருகா வழிகாட்டப்பா!

மணியன் கூறுகிறார்

நன்றி இராமநாதன், உங்கள் பாடல்களால் ஈர்த்துத் தான் இப்பதிவு வந்தது. முருகனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

மணியன் கூறுகிறார்

நன்றி இராகவன்.

ஞானவெட்டியான் கூறுகிறார்

காணக் கண்கொள்ளாக் காட்சி!
துல்லியமான, தெளிவான படப்பிடிப்பு.
நன்றி.

மணியன் கூறுகிறார்

நன்றி ஞானவெட்டியான் அவர்களே

குமரன் (Kumaran) கூறுகிறார்

செய்திக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி மணியன். காலமெல்லாம் கந்தனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. முழு உருவமும் வரும் படி புகைப் படம் கிடைக்குமா? என் கணினியில் இட்டு நினைக்கும் தோறும் கண்டு களிக்கலாம் என்று கேட்கிறேன்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி குமரன். முழு உருவ படம் என் தேடலில் கிடைக்கவில்லை. மலேசிய/சிங்கை அன்பர்கள் உதவலாம்.

b கூறுகிறார்

பத்துகேவ்ஸ் முருகனை படியேறித் தரிசித்து இருக்கிறேன். மிக உயரமான முருகனை கட்டிக் கொண்டிருந்தபோது பார்த்தது. திறப்பு விழா மற்றும் தைப்பூசத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நன்றி மணியன் ஐயா.

மணியன் கூறுகிறார்

நன்றி மூர்த்தி.