டாடாநகர் - பாலைவனப் பூங்கா

சில நாட்களாக திரு. எல்.என்.மிட்டல், ஜெம்செட்பூரைப் பற்றி எழுதியதாக ஒரு மின்னஞ்சல் இணையத்தில் வலம் வருகிறது. கூகிள் உதவியால் அது சுஹேல் சேத் என்பவரால் ஏசியன் ஏஜ்ஜில் 06/05/2004இலேயே எழுதியது என்று தெரிகிறது. இணையத்தின் நம்பகத்தன்மை இவ்வாறு இருந்தாலும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சிந்திக்க வேண்டியவை. டாட்டாக்கள் தங்கள் ஆலைகளை மட்டும் வளர்க்காமல் ஒரு நகரத்தின் எல்லாவித வளர்ச்சியிலும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அங்கு பணிபுரிந்த/புரியும் ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனத்தைப் பற்றி பெருமிதம் கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுவன்றோ சிறந்த மேலாண்மைத் தத்துவம். இந்த முயற்சி பரவினாலே, பல ஜெம்ஷெட்நகர்கள் உருவானாலே இந்தியா வளர்ச்சியடைந்து விடுமே.

டாடாநகர் ஜொலித்தாலும், நமது நெய்வேலி, திருச்சி கனரக தொழிற்சாலை முதலியனவும் சமூக வளர்ச்சிக்கு தங்கள் பங்கை ஆற்றியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பதால் சற்றே நிர்வாக குறைவு இருந்திருக்கலாம். ஆனாலும் பழைய பொருளாதார நிறுவனங்கள் சமூக மாற்றத்திற்கு பெரிதும் காரணமாயிருந்திருக்கின்றன. மாறிவரும் சந்தையில் அவை தடுமாறுகின்றன என்பது ஒரு வருத்தமான செய்திதான்.

புதிய பொருளாதார சூழலில் டாட்டாவின் தொலைதொடர்பு நிறுவனங்கள் கூட எந்த ஒரு நகர வளர்ச்சியிலும் பங்கு கொள்வதாய் தெரியவில்லை. அதனால் இன்ஃபோசிஸ், விப்ரோவை குறை சொல்லத் தேவையில்லை; இருந்தாலும் பலகோடி சம்பாதித்தும் நகர வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை,போக்குவரத்து தடைகளைத்தவிர, என்னும்போது ஆயாசம் தான் மிஞ்சுகிறது.

1 மறுமொழிகள்:

சிவா கூறுகிறார்

நன்றி மணியன் உங்கள் பொங்கல் வாழ்த்துக்களுக்கு. உங்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அடடே! விஞ்ஞான பூர்வமா ஏதோ எழுதறீங்க போல. நல்லா இருக்கு உங்க ப்ளாக். குறித்து வைத்துள்ளேன். அப்புறம் படித்து சொல்கிறேன்.

அன்புடன்,
சிவா