சிகரம் தொட்டவர்கள் !


பிரிட்டிஷ் இராணுவத்தினர் இருவர் 1976 இல் இமயமலையின் எவெரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டு சாதனை நிகழ்த்தினர். ஆங்கில இராணுவத்தின் அந்த சாதனையின் முப்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தின் மூன்று மலையேறும் குழுக்கள் எவெரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அடைய முயற்சி செய்கின்றனர். இம்முறை மேலே செல்வதிலேயே மிகவும் கடினமும் ஆபத்தானதுமான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒன்பது முறை சிகரத்தை எட்டியிருக்கும் டேவ் பன்ட்டிங் (Dave Bunting),வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பயணத் திட்டப்படி முதலில் French Spur மற்றும் மேற்கு ரிட்ஜ் (West Ridge )
வழியாக சென்று வடக்குமுகமாக சிகரத்தை எட்டுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் அதிநவீன டிஜிட்டல் காமெராக்களும் வயர்லெஸ் உபகரணங்களையும் கொண்டு செல்கிறார்கள். இதனால் அவர்களது மலையேற்றத்தை தங்கள் வலைப்பதிவு, பொட்காஸ்ட், படங்கள் மூலம் உடனுக்குடன் பதிகிறார்கள். அட, பிலிம்கூட காட்டறாங்க!

மே16 லிருந்து 21 வரை திட்டமிடப்பட்டிருந்த சிகரம் தீண்டல் மோசமான காலாவஸ்தா ( உபயம்: துளசி) காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவர்களின் முன்னேற்றத்தை நீங்களும் உடனுக்குடன் பார்த்து (மட்டுமே)மகிழுங்கள்.

இமயத்தை வெல்வது சோழ மன்னனுக்கு முடிந்தது; 'நாய்களும் பேய்களும் நயவஞ்சகப் பூனைகளும்' (நன்றி: வீரபாண்டியக் கட்டபொம்மன்) நடமாடும் தற்கால தமிழ்நாட்டில் இயலுமா ?

10 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) கூறுகிறார்

என்னங்க இது. எங்கே போனாலும் எல்லாரும் நாயைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்க இன்னைக்கு. :-(

சிகரம் தொடுதல் நம்மவரிடம் இப்போது கொஞ்சம் குறைந்து தான் போனது.

மணியன் கூறுகிறார்

இன்னைக்கு நாய் முகத்தில் விழித்திருப்போமோ ?

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

//நயவஞ்சகப் பூனைகளும்' //
என்னங்க பூனையை இப்படிச் சொல்லிட்டீங்க!! :(

ஆமாம், நம்ம ஊர்ல மலை ஏறுபவர்களும் சிகரம் தொடுபவர்களும் குறைவுன்னு நினைக்கிறீங்களா? யாரோ ஒரு தமிழ்னாட்டு/கேரளாக்காரர் இமயமலைக்குப் போய் கல்யாணம் கூட செய்துகிட்டதா படிச்சேனே... போதுமான விளம்பரம் செய்யாம/இல்லாம இது மாதிரி சாதனைகள் செய்பவர்கள் - இங்கயும் இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன்...

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ், எனக்கும் பூனைகள் பிடிக்கும். நரிகள் என்று இருக்க வேண்டுமோ :( ( வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் சரியாக நினைவிலில்லை. தூக்குமேடைக்கு செல்லும்சமயம் பேசும் வசனம் அது.
தமிழர்கள் சாதனை நிகழ்த்துவதில் சளைத்தவர்கள் இல்லைதான். ஆனால் வெற்றுச் சண்டைகள் இல்லாதிருந்தால் இன்னும் சாதிக்க இயலுமே என்ற சலிப்புதான்.

வெற்றி கூறுகிறார்

மணியன்,
முதலில் நல்ல தகவலைத் தெரியத்தந்தமைக்கு என் நன்றிகள்.

// இமயத்தை வெல்வது சோழ மன்னனுக்கு முடிந்தது; 'நாய்களும் பேய்களும் நயவஞ்சகப் பூனைகளும்' (நன்றி: வீரபாண்டியக் கட்டபொம்மன்) நடமாடும் தற்கால தமிழ்நாட்டில் இயலுமா ?//

உங்கள் ஏக்கம் புரிகிறது. எம்மினத்தின் தலையெழுத்தா அல்லது சாபாக்கேடா என்று நானும் பல தடவைகள் என்னையே கேட்டுக்கொள்வேன்.

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

//ஆனால் வெற்றுச் சண்டைகள் இல்லாதிருந்தால் இன்னும் சாதிக்க இயலுமே என்ற சலிப்புதான். //
மணியன், நட்சத்திர வாரத்தில் இந்த மாதிரி பாயின்டை எல்லாம் தொடக் கூடாதுங்க..:)
ஏதோ அந்த இமயமலையில் திருமணம் பத்தி நான் சொன்னது சரியா தப்பான்னு பார்த்து சொல்லுங்க...

மணியன் கூறுகிறார்

வாங்க வெற்றி. நம்பிக்கையோடு நாளை நமதே என்று நேர்மறையான எண்ணங்களை கொண்டவன் தான் நான். நேற்று என்னவோ ஒரு சலிப்பு என் இடுகையில் விழுந்துவிட்டது. சாதிப்போம்,நம்புங்கள்.

மணியன் கூறுகிறார்

பொன்மகளே, நீ சொல்வதும் சரிதான். இனி கப்சிப்.
எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழரோ மலையாளியோ எனக்குத் தெரியவில்லை. அங்கு எட்டுவதே மிக கடினம். அங்கு கல்யாணமா ? No Chance. நீங்கள் கொடுத்த சுட்டிகளை படிக்கவில்லை என்று தெரிகிறது.
இமயமலை என்பது அடிவாரத்திலிருந்து எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது ஏதாவது சிறிய சிகரமாக இருக்கலாம். அட, நம்ம இரஜினி போவதும் இமயமலைக்குத் தானே.சீனாவிலிருக்கும் கைலாச மலையை கீழிருந்து காண செல்வதற்கு இந்திய அரசின் வெளியுறவுத் துறை ஏற்பாடு செய்கிறது.

Muthu கூறுகிறார்

இவங்க சக்சஸ் ஆனவுடன் சொல்லுங்க சார்..

வாழ்த்திவிடுவோம்..

இப்போதைக்கு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

மணியன் கூறுகிறார்

வாங்க முத்து, நிச்சயம் வாழ்த்துவோம்.