நூற்றில் ஒருவர் - விக்ரம்

அமெரிக்க டைம் இதழ் “ நம் உலகை உருவாக்குபவர்கள்” என்று 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பில் கிளின்டன், பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ், ஜார்ஜ் புஷ் போன்றவர்காளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ளவர்கள் இருவரே. இன்ஃபோசிஸ் நிறுவனரும் தலைவருமான நந்தன் நீலகேனி ஒருவர். மற்றவர் நுண்கடன் வழங்கி வேகமாக வளர்ந்துவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த SKS Microfinance இன் நிறுவனரும் தலைவருமான விக்ரம் அகூலா . தன் பரிந்துரையில் இந்திய ஏழைமக்களின் துயர் நீக்க நுண்கடன் வழங்குவதில் முன்னோடி என்று அவரைக் குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் பிறந்த்து அமெரிக்காவில் வளர்ந்த 37 வயதான விக்ரம் 1998இல் SKS Microfinance நிறுவனத்தை தொடங்கி வறியவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் வண்ணம் 2,21,000பேருக்கு ரூபாய் 240கோடி கடன் வழங்கி பணியாற்றி வருகிறார். கால்நடைகள் வாங்க, விவசாயம், காய்கறி மற்றும் சிறுவியாபாரம், சிறுதொழில்கள் முதலியவற்றிற்கு கடன் கொடுத்து வருகிறார். SKS கல்விநிறுவனம் அவர்கள் குழந்தைகளுக்கு அறிவொளியை பரப்புவதிலும் பங்காற்றுகிறது. ஆந்திரா,கர்நாடகம்,மஹாராஷ்ட்ரா, ஒரிசா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 85 கிளைகளை கொண்டு பணியாற்றுகிறது. ஏழைகள் என்பதால் இவை வாராக் கடன்கள் அல்ல. 98% சரியான நேரத்தில் அவை திருப்பி அடைக்கப் படுகின்றன.எல்லா வர்த்தக பரிமாற்றங்களும் கணினி மூலம் நடைபெறுவதால் நிலுவையிலுள்ள கடன்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடிகிறது. அவரின் சிறந்த பணிகளை பலரும் உணர்ந்து அவருக்கு மீள்கடன் (refinace) செய்ய முன்வருகிறார்கள். அந்தவகையில் வறியவர்களின் வாழ்வை வளப்படுத்துவதோடு, நிதிநிறுவனங்களுக்கு வெற்றிகரமான ஆபத்தில்லாத வருமானவழியையும் காட்டியுள்ளார். இந்த சேவை மூலம் பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

தமிழகத்தில் பெண்களின் தன்உதவிக்குழுக்களின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் காணும்போது, இங்கே ஒரு விக்ரம் உருவானால் இளைஞர்களும் இத்தகைய வளர்ச்சியில் பங்கு கொண்டு முன்னேறலாம். பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்பதால், வீணான சண்டைகளும் குறையும்.

யாரந்த தமிழக விக்ரம் ?

19 மறுமொழிகள்:

தேசாந்திரி கூறுகிறார்

மிக நல்ல பதிவு ஒரு நல்ல மனிதரைப் பற்றி. இத்தகைய பதிவுகளைப்படிக்கும் போது மனதில் நல்ல எண்ணங்களே ஓங்குகின்றன.

மிக்க நன்றி.

மணியன் கூறுகிறார்

நீங்கள் முதல்வரானால் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.:))

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Sam கூறுகிறார்

இவரைப் பற்றி நானும் எழுத இருந்தேன். ஆமாம் இவர் முயற்சிகள் தமிழகத்திற்கு வர தனியார்
உதவ வேண்டுமா அல்லது அரசாங்கம் உதவ வேண்டுமா? பங்களாதேஷ் முகமது யூனுஸின் கிராமீன்
திட்டமும் நினைவுக்கு வருகிறது. எழைகள் ஏழைகளாய் இருந்தால் தான் அரசியல்வாதிகளுக்கு
லாபம். சேவை மனப்பான்மை உடைய இளைஞர்கள் இந்த மாதிரி முயற்சிகளை கொண்டு வருவார்கள்
என்று எண்ணுகிறேன். நல்ல பதிவு.
அன்புடன்
சாம்

மலைநாடான் கூறுகிறார்

//இங்கே ஒரு விக்ரம் உருவானால் இளைஞர்களும் இத்தகைய வளர்ச்சியில் பங்கு கொண்டு முன்னேறலாம். பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்பதால், வீணான சண்டைகளும் குறையும்.//

நல்ல சிந்தனை. யார்வருவார்?

துளசி கோபால் கூறுகிறார்

மணியன்,

நல்ல பதிவு.

இவுங்க எல்லாம்தான் நம் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

எப்படியாவது நாடு, இல்லே இந்த உலகம் நன்னாயால் சரி.

சிறில் அலெக்ஸ் கூறுகிறார்

நல்ல பதிவு வாழ்க விக்ரம்... ஒரு நிமிஷம் சியான் விக்ரமோ என நினைத்தேன்..
அவர்தான் 1000த்தில் ஒருவராச்சே.

jeevagv கூறுகிறார்

செய்தியைப்படித்திருக்கிறேன் - ஆனால் இப்போதுதான் அவரது படமும் மேலதிக விவரவமும் பார்க்கிறேன்.
பதிவுக்கு நன்றி.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி சாம். அவர் வரவேண்டும் என்றில்லை. நம்மில் ஒரு துடிப்புள்ள இளைஞர் முன்வந்தால் வங்கிகளும் venture capitalistகளும் பணம் கொடுக்கத் தயார்.
லோக்பரித்ரன் இளைஞர்கள் அரசியலில் இறங்குவதை விட இந்த மாதிரி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி மலைநாடன். காலம் கனிகிறது. வருவார்கள்.....

மணியன் கூறுகிறார்

துளசி சேச்சி, நல்ல முயற்சிகளை் நம்மைவிட வெளிநாட்டுபத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

மணியன் கூறுகிறார்

வாங்க சிரில், இத்தகைய இளைஞர்கள்தான் நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி ஜீவா.

துளசி கோபால் கூறுகிறார்

//நல்ல முயற்சிகளை் நம்மைவிட வெளிநாட்டுபத்திரிகைகள்
வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.//

நம்ம பத்திரிக்கைகளுக்கு எதுக்கு இந்த அக்கப்போரெல்லாம்?
அதான் நம்ம அரசியலும் சினிமாவும் இருக்கே, அது போதாதா பக்கங்களை நிறைக்க.

மணியன் கூறுகிறார்

ஆமாம், அரசியல், சினிமாவை விட்டால் கொலை கொள்ளை தான். பாசிடிவான நிகழ்வுகள் கவனம் பெறுவதில்லை.

வெளிகண்ட நாதர் கூறுகிறார்

மணியன், இந்த சிறந்தவர் வரிசையில் விக்ரமை பற்றி படித்தவுடன் பதிவு போடணும் நினச்சேன், ஆனா அதுக்கு முன்ன முக்த்ரன் பீபி பத்தி போடுவோம்ங்கிறதாலே இவரை வுடுட்டேன். நீங்க போட்டிட்டீங்க வாழ்த்துக்கள்!

மணியன் கூறுகிறார்

வாங்க வெளிகண்டநாதர்,
அவர் நீதிக்காக போராடினார்; இவர் கிராம பொருளாதாரம் வளர உதவினார். இத்தகையோரின் சீரிய செயல்கள் அத்தனை பிரபலமாவதில்லை என்பதுதான் வருத்தம்.

தேசாந்திரி கூறுகிறார்

//நீங்கள் முதல்வரானால் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.:))//

ஓ! நீங்கள் அதைப் படித்தீர்களா? நன்றி.

மஞ்சூர் ராசா கூறுகிறார்

அன்பு மணியன்,
மிக நல்ல பதிவு. இதுபோல மிக சில நபர்கள் முன்வந்து ஏழைகளுக்கு உதவினாலே இந்தியா மிக வளர்ச்சிப்பெற்றுவிடும். அரசு சார் நிதி நிறுவனங்களும் இத்தகையோருக்கு முழு ஆதரவு கொடுக்கவேண்டும்.

நன்றி.

மணியன் கூறுகிறார்

வாங்க மஞ்சூர்ராசா , இத்தகையோரே வளமான இந்தியாவிற்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்கள்.