ஹலோ, ஹலோ சுகமா ?


எனது பணிக்காலம் முழுவதும் இருந்த ஒரே துறை தொலைதொடர்பு துறையாகும். இந்த வருடங்களில்தான் எத்தனை வளர்ச்சியும் மாற்றமும். இத்தகைய ஒரு துறையில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை ஒரு பெருமையாக கருதுகிறேன்.பாதிபேர் தொலைபேசி இணைப்பிற்காக காத்திருக்கிறார்கள்; மீதிபேர் டயல்டோனிற்கு காத்திருக்கிறார்கள் என்று கேலி செய்த காலத்திலிருந்து காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை ஒரு ரூபாயில் பேசும் வாய்ப்புவரை வெகுதூரம் வந்திருக்கிறோம். இக்கட்டமைப்பின் வலுவிலேதான் வெளிநாட்டு வேலைகளை நாம் செய்துகொடுத்து பணிவாய்ப்புகளை பெருக்க முடிந்திருக்கிறது.தொலைதொடர்பு என்பது ஒரு பொருளாதாரத்திற்கு மிக இன்றியமையாதது.

இந்தியாவில் அதன் வளர்ச்சி குறித்தான சில படிகற்கள்:
1837 மின்சார தந்திக்காக இங்கிலாந்தின் குக்கும் வீட்ஸ்டோனும் (Cooke and Wheatstone) காப்புரிமை பெற்றது.
1839 சாஹ்னிசி (Shaughnessy) கொல்கொதாவில் முதல் தந்தியை சோதித்தது.
1845 "What Hath God Wrought" என்ற முதல் வார்த்தைகள் அமெரிக்காவில் வாஷிங்டனிலிருந்து பால்டிமோருக்கு தந்தி மூலம் அனுப்பப்பட்டது.
1852 இந்தியாவில் கொல்கொதாவிற்கும் டயமண்ட் ஹார்பர் துறைமுகத்திற்கும் முதல் தந்திகம்பி இழுக்கப்பட்டது.
1866 அட்லாண்டிக் பெருங்கடலின் அடியே தந்தி அனுப்ப கேபிள் போடப்பட்டது.
1870 மும்பை- ஏடன் - இலண்டன் இடையே முதல் கடலடி (sub-marine) கேபிள் இணைப்பு ஏற்படுத்தப் பட்டது.
1876 அலக்சாண்டர் கிரகாம் பெல்லால் தொலைபேசி கண்டுபிடிப்பு.
1882 இந்தியாவில் முதல் தொலைபேசி இணைப்பகம்(exchange) எற்படுத்தப்பட்டது.
1901 மார்கோனி அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து கம்பியில்லா தந்தியை (Wireless Telegraph) அனுப்பினார்.
1927 இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே கம்பியில்லா தந்தியை IRT நிறுவியது.
1951 மும்பைக்கும் அகமதாபாத்திற்கும் இடையே முதல் டெலக்ஸ் சேவை தொடங்ப் பட்டது.
1953 நாட்டின் முதல் தானியங்கி தொலைபேசி இணைப்பகம் கொல்கொத்தா தொலைபேசி நிறுவனத்தால் அமைக்கப் பட்டது.
1960 கான்பூருக்கும் இலக்னோவிற்கும் இடையே STD சேவை தொடங்கப் பட்டது.
1976 மும்பைக்கும் இலண்டனுக்கும் இடையே வெளிநாட்டு நேரடி சேவை ISD தொடங்கப் பட்டது.
1989 மின்னஞ்சல் சேவை VSNL நிறுவனத்தால் தொடங்கப் பட்டது.
1991 I-Net எனப்படும் பொது பாக்கெட் தரவு இணையம் (PSDN)உருவானது.
1994 பேஜிங் சேவை தனியார்துறையில் அறிமுகமானது.
1994 தனியார்துறையில் செயற்கைகோள்வழி தொலைதொடர்பு VSAT சேவை தொடங்கப் பட்டது
1995 கொல்கொத்தாவில் மோடிடெல்ஸ்ட்ரா நிறுவனம் செல்பேசி சேவையை தொடங்கியது.
1995 VSNL தன் இணைய சேவையை ஆரம்பித்தது.
1998 தனியார் அடிப்படைதொலைபேசி சேவைகளை நடத்த அனுமதித்து இந்தூரில் துவங்கப் பட்டது.

சுதந்திர இந்தியாவில் பிரிவினைக்குப் பின் இருந்த நிலவரம்:
7,330 தந்தியாபீசுகள்,
321 பொது தொலைபேசி இணைப்பகங்கள்
82,985 தொலைபேசிகள்
மொத்த சொத்துக்களின் மதிப்பு: ரூ.31 கோடி

தற்போதைய நிலவரம்:
4,78,88,000 நிலைபேசிகள்
9,19,93,449 செல்தொலைபெசிகள்
61,25,000 இணைய தொடர்புகள்
8,35,000 அகலப்பாட்டை இணையதொடர்புகள்

சுதந்திர இந்தியாவின் முதல் 50 வருடவளர்ச்சியில் நூற்றுக்கு இருவர் என்ற கணக்கில் (டெலிடென்சிடி) தொலைபேசிகள் இருந்தன. ஆனால் கடந்த இருவருடங்களில் ஒவ்வொருவருடமும் 2% முன்னேறியுள்ளது. தற்போது 12.3% ஆக உள்ளது. இதன் பெரும்பங்கு செல்பேசிகளின் அபரிமித வளர்ச்சியாலேயே யாகும். உலகிலேயே மிகவும் குறைந்தவிலையில் தரம்வாய்ந்த செல்பேசி சேவைகளை வழங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த வளர்ச்சி இன்னும் கிராமங்களுக்கு எட்டவில்லை. நமதுதமிழ்நாடு/கேரளாதவிர மற்ற மாநிலங்களில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் தொலைபேசி அடர்த்தியில் மிகுந்த இடைவெளி இருக்கிறது. (நகர்புறம்:26.2%, கிராமங்கள்: 1.74%)

மிக வேகமான வளர்ச்சியாலும் அதிர்வெண்தொகுதி (Spectrum) தட்டுப்பாட்டினாலும் செல்பேசி இணைப்புகளில் தடங்கல்கள் உள்ளன. இராணுவம் 45Mhz வரை அதிர்வெண்களை திரும்பக் கொடுக்க உள்ளது. இதனை எல்லா செல்பேசிநிறுவனக்களுக்கும் பகிர்ந்தளிப்பதுமூலம் இந்த தடங்கல்கள் ஓரளவு நீங்கி தெளிவான பேச்சுக்கு வழி வகுக்கும். Number Portability எனப்படும் நிலையான எண்கள் தரும் சேவையும் கொண்டுவர இந்திய தொலைதொடர்பு கண்காணிப்பு குழுமம்(TRAI) முயல்கிறது. இதன்மூலம் ஒரு சேவைநிறுவனத்திடமிருந்து இன்னொரு சேவை நிறுவனத்திற்கு மாறும்போது செல்பேசி/நிலைபேசி எண் மாறாது.

இதற்குமேல் போரடிக்க விரும்பவில்லை. கேப்டன் போல எத்தனை நம்பர்கள் கொடுத்தாலும், கடைசியில் உபயோகிப்பவர் வேண்டிய பயனை அடைய முடியவில்லை என்றால் என்ன பயன் ? துளசி அவர்களின் இந்திய விஜயத்தின் போது படுத்திவிட்டதே. எட்ட வேண்டிய இலக்குகள் (அவை உயரும் இலக்குகளாயிருந்தாலும்) இன்னும் இருக்கின்றன என அவை உணர்த்துகின்றன.

13 மறுமொழிகள்:

Chellamuthu Kuppusamy கூறுகிறார்

பயனுள்ள புள்ளி விபரங்கள். நிறைய மெனக் கெட்டுரிப்பீர்கள் போலத் தெரிகிறது.

- குப்புசாமி செல்லமுத்து

Sivabalan கூறுகிறார்

சார்,

மிக நல்ல பதிவு.

//ஒரு ரூபாயில் பேசும் வாய்ப்புவரை வெகுதூரம் வந்திருக்கிறோம் //

இது எவ்வளவு தூரம் நிறைவேற்ற பட்டுள்ளது. அறிய ஆவல். வேறு உள் நோக்கம் இல்லை.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றிகுப்புசாமி செல்லமுத்து. இதுவரை யாரும் படிக்கவில்லையோ என்றிருந்தேன். முதல் பின்னூட்டம் அளித்து நம்பிக்கை கொடுத்ததிற்கும் நன்றி.

மணியன் கூறுகிறார்

வாங்க சிவபாலன், ஒருரூபாய் நிரைவேறியதில் என்ன சந்தேகம் ? அதாவது சில பிளான்களில் மட்டுமே என்று சொல்கிறீர்களா ? ஆமாங்க, இப்போ எல்லாருமே சில fineprint களில் விளையாடுகிறார்கள். மாதாந்திர வாடகையை ஏற்றிவிட்டு தனிகால்களின் ரேட்டை குறைத்திருக்கிறார்கள். இருந்தாலும் லோகல்காலே நிமிடத்திற்கு 16ரூ இருந்த காலத்திலிருந்து தொலைதூர கட்டணமே நிமிடத்திற்கு ஒரு ரூ சாதனைதான்.

Sivabalan கூறுகிறார்

//16ரூ இருந்த காலத்திலிருந்து தொலைதூர கட்டணமே நிமிடத்திற்கு ஒரு ரூ சாதனைதான் //

உண்மை!! பெரிய சாதனைதான் சார்.

நன்றி!!

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

சாரி, இத்தனை நம்பர் போட்டா எப்படி?!!

கேப்டனுக்கு அடுத்து நட்சத்திரம் மணியன் தான் என்று சொல்லி என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்:)

மணியன் கூறுகிறார்

பொன்ஸ், தொலைபேசியென்றாலே நம்பர்களில்லாமல் இருக்குமா :))

குமரன் (Kumaran) கூறுகிறார்

அருமையான கட்டுரை மணியன். நிறைய விவரங்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

மணியன் கூறுகிறார்

நன்றி குமரன்.

துளசி கோபால் கூறுகிறார்

என்னங்க மணியன்,

லோகல் காலுக்கு 16 ரூபாய் ஒரு நிமிஷத்துக்கா? இதெல்லாம் எப்ப ?

அந்தக் கணக்குலே பாத்தா, இந்த 1 ரூபா(2 ரூபா) கணக்கு பரவாயில்லேதான்.

நட்சத்திர வாரப்பதிவுகளிலே 'பேர்' பொ(ரி)றித்ததற்கு நன்றியும் சொல்லிக்க்கறேன்:-)

மணியன் கூறுகிறார்

ஆமாம் துளசி, செல்பேசி வந்த புதிதில் நிமிடத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு 16 ரூபாயும் அழைப்பை பெறுவதற்கு 6 ரூபாயாகவும் இருந்தது. அப்புறம் அழைப்பை பெறுவது உள்ளூர் அழைப்புகளுக்கு இலவசமானது. இப்போது 'வாழ்நாள்' முழுவதும் அழைப்புகள் பெற இலவசம்.
வெளிநாட்டு அழைப்புகள் இங்கிருந்து அமெரிக்காவிற்கு நிமிடத்திற்கு 80 ரூபாயிலிருந்து இன்று 6ரூபாய்வரை குறைந்திருக்கிறது.

Anonymous கூறுகிறார்

சிறந்த தகவல்கள்.மணியன் சார்!இதுபோல நிறைய எழுதுங்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

மணியன் கூறுகிறார்

நன்றி துபாய்ராஜா.உங்கள் தொடர் வருகை எனக்கு உற்சாகமளிக்கிறது.