படப்பிடிப்பில் படபடப்பு!!
ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ப்ராட் பிட்டும் அவர் மனைவியும் நடிகையுமான அஞ்சலினா ஜோலியும் இந்தியாவில் தங்கள் படப்பிடிப்பிற்காக வந்திருக்கிறார்கள். கடத்திக் கொல்லப்பட்ட வால்ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் டானியல் பேர்ல் மனைவியாக ஜோலி நடிக்க பிட்ட் தயாரிக்கும் 'A Mighty Heart' படத்திற்காக புனேயில் தங்கி படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இராஜஸ்தானிலும் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. இவர்களைக் காண திரண்டிருந்த மக்களிடம் இவர்களின் தனி பாதுகாவலர்கள் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த வியாழனன்று மும்பையில் அஞ்சுமான்-ஏ-இஸ்லாம் பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் மீண்டும் தகராறு நிகழ்ந்திருக்கிறது. பள்ளி விட்டதும் தங்கள் குழைந்தைகளுக்காக காத்திருந்த பெற்றோருக்கும் இந்த மெய்காப்பாளர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றியிருக்கிறது.தங்களை அடித்துக் காயப்படுத்தியதாகவும் 'Bloody Indians' என இன அவமதிப்பு செய்ததாகவும் மும்பைகாவல் துறையில் வழக்குப் பதிந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று காவலாளிகளுக்கும் ஜாமீனில் விடுதலை அளித்து அடுத்த ஒருவாரத்திற்கு தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட பணிக்கப் பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் படப் பிடிப்பு நடத்த காவல்துறை அனுமதியும் பெறவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே பிராட் பிட் மும்பை போலிஸ் கமிஷனர் திரு ராயை சந்தித்து நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
பாகிஸ்தானிற்கு அருகாமையில் இருப்பதால் புனேயை தேர்ந்தெடுத்துள்ள இந்தக் குழுவினருக்கு அல் கொய்தாவின் மிரட்டல் இருப்பதால் "Y" ரக பாதுகாப்புக் கொடுக்க பட்டுள்ளது. ஆனால் இந்திய சட்டதிட்டங்களுக்கு இவர்கள் எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. இதேபோல நமது கமல், இரஜினியின் பாதுகாவலர்கள் அவர்கள் நாட்டில் நடந்து கொண்டால் இந்த அளவு சகிப்புத் தன்மை காண்பிப்பார்களா ? இந்த படப்பிடிப்பை அனுமதிப்பதன் மூலம் அல்கொய்தாவின் கவனத்தையும் வீணாக கவர்கிறோம்.
இதனிடையே இன்றைய தினசரியில் திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணம் இங்கு பாந்த்ராகுர்லா மைதானத்தில் டிச.3,4 இல் நடைபெறவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்காக திருப்பதி திருமலையில் இருந்து உறசவ மூர்த்திகள் கொண்டுவரப் படுவதாகத் தெரிகிறது. இவை எல்லாம் புதிய நடைமுறைகள். உற்சவ மூர்த்திகளை ஊரை விட்டு ஊர் எடுத்துப் போவதெல்லாம் சரியா எனத் தெரியவில்லை. இது சமயத்தை வணிகமயமாக்கலின் தாக்கமே. முன்பெல்லாம் கோவில் வாசலில் பிச்சைக்காரர்கள் நமது சமய உணர்வுகளை, தர்ம சிந்தனையை exploit செய்வார்கள்; இப்போது மத தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர பல்லாயிரக் கணக்கானவர்கள் திறந்த வெளியில் கூடுவது, அதுவும் பாபர்மசூதி நினைவுநாளுக்குச் சமீபம், எந்த அளவு பாதுகாப்பானது என்றுத் தெரியவில்லை.
8 மறுமொழிகள்:
பணத்திற்காக, பெருமைக்காக கண்ட வெள்ளைக்கார பன்றிகளை உள்ளே விட்டுவிட்டு இப்போது லபோதிபோ என கத்தினால்? நாட்டு மக்களை மதிக்காத நாய்களை வெளியே தள்ளி கதவை சாத்தி இருக்கவேண்டும்.
//சகிப்புத் தன்மை காண்பிப்பார்களா ? // வரலாறு இல்லாத இந்த காட்டுமிராண்டிகளுக்கு எந்த கண்றாவியும் இருக்காது.
படத்தில் யார் அந்த வெள்ளைக்கார நாய்க்கு நம் இன குழந்தையை கையில் கொடுத்தது.
மாசிலா, வருகைக்கு நன்றி.உங்கள் ஆதங்கம் மிகக் காட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. அருமையான கவிதைகள் கொடுக்கும் உங்கள் மொழியில் இனிமை சேர்க்கலாமே :)
//படத்தில் யார் அந்த வெள்ளைக்கார நாய்க்கு நம் இன குழந்தையை கையில் கொடுத்தது.//
அது அவர் தத்தெடுத்துள்ள எதியோப்பியக் குழந்தை Zahara.
அவர்கள் அவ்வாறு தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியது தவறு. கண்டிக்கிறேன்.
ப்ராட் பிட் மன்னிப்பு கேட்டிருந்தாலும், நம்மவர்கள் செய்வது கொஞ்சம் அதிகமே.... வெள்ளைக்காரர்கள் அல்லது அரபிகள் நம்மூருக்கு வந்தால் நமது மக்களின் குழைவும், நெளிவும் கொஞ்சம் அதிகம் தான். அவர்கள் ஊரில் நம்மை எப்படி மதிக்கிறார்கள் என்பதை போய் பார்த்தால்தான் தெரியும்.
திருப்பதி தேவஸ்தானம் செய்வது மாபெரும் தவறு. ஏற்கனவே கடவுள் வழிபாடு வியாபாரமாகி வரும் வேளையில் இப்பொழுது இது போல செய்வது வியாபார நோக்கம் மட்டுமல்ல. இன உணர்வை தூண்டுவதாகவும் அமைந்து நீங்கள் சொல்வது போல தீவிரவாத அமைப்புகளின் கவனத்தையும் சென்றடையும்.
இவர்கள் என்று தான் திருந்துவார்களோ?
---தனி பாதுகாவலர்கள் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.---
எத்தனை சர்ச்சைகள்! இதற்கு முன்பே மிஷன் இம்பாஸிபிள் (2), போர்ன் சுப்ரிமஸி போன்ற பெருந்தலைப் படங்களில் இவ்வாறு நிகழவில்லையே!
ஷங்கரின் சிவாஜி படப்பிடிப்பு கூட சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், படபடப்பைக் கூட்ட வில்லையே (அருமையான தலைப்பு ;-)
திட்டமிடுதல் சரியில்லையோ?
//இதனிடையே இன்றைய தினசரியில் திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணம் இங்கு பாந்த்ராகுர்லா மைதானத்தில் டிச.3,4 இல் நடைபெறவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்காக திருப்பதி திருமலையில் இருந்து உறசவ மூர்த்திகள் கொண்டுவரப் படுவதாகத் தெரிகிறது.//
இதுல இது வேற..
>> The gods will be married with Vedic rites in the presence of Kanchi seer Jayendra Saraswati. <<
அன்பு நண்பரே நேற்று நான் அனுப்பிய பின்னூட்டம் காணவில்லை.
ஏதாவது பிரச்சினையா?
வருகை தந்த சிவபாலன், மஞ்சூர்ராசா,பாஸ்டன் பாலா, பெத்த ராயுடு ஆகியோருக்கு நன்றிகள்.
நேற்றைய தினம் என் வீட்டுக் கணினியில் இணைய இணைப்பிற்கு தடங்கல் ஏற்பட்டதால் உடன் உங்கள் பின்னூட்டங்களை வெளியிட முடியவில்லை.
மறுமொழியிட