பில் கேட்ஸுக்கு டாட்டா ?


தமிழ்நாட்டிற்கு மிகுந்த கோலாகலத்துடன் வந்து முதல்வரை சந்தித்து பல்லாயிரம் கோடி முதலீடு செய்வதாக கூறியிருந்த பில் கேட்ஸின் மைக்ரோசஃப்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக தமிழக அரசு திறமூல இயங்குதளமான லினக்ஸ் வகை வினியோகங்களை தங்கள் மின் அரசாண்மை ( e-governance) முயற்சிகளுக்கு பயன்படுத்தப்போவதாக குருபிரசாத் பதிவில் கூறியுள்ளார். தனது பத்திரிகை பேட்டியில் எல்காட் நிறுவன தலைவர் திரு. உமாசங்கர் மைக்ரோசஃப்ட் நிறுவன அதிகாரிகளை தான் எவ்வாறு எதிர்கொண்டார் என விவரித்துள்ளார். ஆயினும் பள்ளிகளுக்கு Suse Linux என்று சொல்லும்போது அரசு திறமூல மென்பொருட்களை(OSS) ஆதரிக்கிறது; ஆனால் இலவச திறமூல மென்பொருட்களை (FOSS)இல்லை என்னும்போது Novel நிறுவனத்தின் மீது ஐயம் எழுகிறது. இருப்பினும் முதன்முயற்சியில், பயிற்சி இல்லாதநிலையில், ஒரு நிறுவன ஆதரவு வேண்டும் என்பதால் இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம். கேரள அரசைப் பின்பற்றி எடுத்துள்ள இம்முடிவு தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கும் பெருதும் அடி கோலும்.

பில் கேட்ஸ் அறிவித்த வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு என்ன நேரப்போகிறது என்றும் ஆவலும் கவலையும் ஏற்படுகிறது. திறமூல மென்பொருள் வல்லமை தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வேலைகளை உருவாக்குமா அல்லது உலகின் சர்வாதீன மென்பொருள் வேலை வாய்ப்புக்களை கொடுக்குமா என்ற Hobson's choce இல் முடிவெடுப்பது கடினம்தான். திரு உமாசங்கரின் பேட்டியை நோக்கும்போது இது ஒருவேளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஏதெனும் சங்கேதமோ என்ற சந்தேகம் நம் அரசியல் வரலாற்றால் எழுந்தாலும் இந்த முடிவு நிலைக்கும் என்று எண்ணி தமிழக அரசை பாராட்டுவோம்.

கேரள அரசு பள்ளிகளில் லினக்ஸ் கொணர்ந்ததைப் பற்றி சக பதிவர் கே.சுதாகர்(ஸ்ரீமங்கை)யின் பதிவுகள் இங்கே: சுட்டி 1, சுட்டி2, சுட்டி3

12 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் [GK] கூறுகிறார்

// கேரள அரசைப் பின்பற்றி எடுத்துள்ள இம்முடிவு தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கும் பெருதும் அடி கோலும்.//

துணிச்சலான முடிவு ! வெற்றி அடைந்தால் நல்லது.

நற்கீரன் கூறுகிறார்

நீங்கள் சொல்வது சரி. Suse Edition is sponsered by Novel, which has signed a parnership agreement with MS. One of Suse's chief SW designers has left for Google over this. இதை அவர்கள் அறிந்துதானே இருப்பார்கள். அத்தோடு தமிழை ஏதுவாவாக்க வேண்டும். FOSS இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பேராசையா...:-)

வெற்றி கூறுகிறார்

மணியன் ஐயா,
முதலில்[First of all], உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பதிவுக்கு நன்றி. பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க நற்கீரன். எதையும் ஐயத்துடன் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. இருப்பினும் இது ஒரு நல்ல ஆரம்பம்.காரணமானவர்களை வாழ்த்துவோம்.

மணியன் கூறுகிறார்

வெற்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Anonymous கூறுகிறார்

இது போன்ற திறமையான செயல்பாடுகளை, திரு. உமா சங்கர் அவர்களிடம் எதிர்பார்த்தோம்.
நல்ல முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்.

(திரு. உமா சங்கர் எங்கள் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தார், திறமையான மனிதர்)

வெங்கட்ராமன் கூறுகிறார்

நல்ல முயற்சி, நல்ல சேதி.

நன்றி

Unknown கூறுகிறார்

வெண்ணவெட்டி, வெங்கட்ராமன்: நன்றி.

Guru Prasath கூறுகிறார்

எனது பதிவை refer செய்தமைக்கு மிக்க நன்றி மணியன் அவர்களே. திரு. உமாசங்கர் அவர்கள் தைரியமான மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவர் http://groups.yahoo.com/group/egovindia என்னும் பிரபலமான குழுவில் மிகவும் மதிக்கப்படுபவர். இந்த குழு egovernance சார்ந்த விஷயங்களை விவாதிக்கின்றது. திரு. உமாசங்கர் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இந்தியாவிலேயே முதன்முறையாக egovernance செயல் படுத்தினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க குருபிரசாத். உமாசங்கர் போன்ற தொலைநோக்குள்ள, செய்கின்ற பணியிலே முழு ஈடுபாடு கொண்ட அரசு அதிகாரிகளினாலேயே தமிழகம் பெருமை அடைகிறது. அவரை அறிமுகம் செய்த உங்களுக்கும் மா.சிவகுமார் அவர்களுக்கும் நன்றி.

Santhosh கூறுகிறார்

உமா சங்கர் போன்ற திறமையான அதிகாரிகள் சென்ற ஆட்சியில் ஓரம் கட்டப்பட்டார்கள். அவர்களின் கைகள் விடுவிக்கப்பட்ட உடன் இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இது ஒரு நல்ல முடிவே.

மணியன் கூறுகிறார்

ஆமாம் சந்தோஷ்குமார், நல்ல ஆரம்பமே.