மக்களவையின் புதுமுகம்


மும்பையின் வடமேற்கு தொகுதியிலிருந்து அண்மையில் இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள பிரியா தத் தனது முதல் வரவிலேயே சலசலப்பு ஏற்படுத்தியுள்ளார். என்ன உடை பற்றித்தான். பெண் எம்.பி என்றால் சேலையும் சல்வாரும்தான் என்றிருந்த சம்பிரதாயத்தை உடைத்து பேண்ட் சட்டையில் வந்துள்ளார். இதற்கு முன்னால் ஒரு சிவசேனையின் உறுப்பினர் இவ்வாறு வந்தபோது கட்சியினால் சேலைக்கு மாற கட்டாயப் படுத்தப் பட்டார்.

ஆனால் இச்சமயம் காங்கிரஸ் அவர் பக்கம். கல்லூரிகளிலேயே உடைகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரும் இக்காலத்தில் காங்கிரஸின் இந்நிலை வரவேற்க தக்கது.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதுடன் உடை கண்டு எள்ளாமையும் வேண்டும். அவர் ஆற்றும் உரை கொண்டு நோக்குவோம்.

மக்களவையின் இளரத்தங்கள் கொண்டுவரும் மாற்றங்கள் அவர்தம் உடையோடு நிற்காமல் புதிய பாரதத்தின் எழுச்சிக்கு துணை நிற்பதாக.

2 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) கூறுகிறார்

//மக்களவையின் இளரத்தங்கள் கொண்டுவரும் மாற்றங்கள் அவர்தம் உடையோடு நிற்காமல் புதிய பாரதத்தின் எழுச்சிக்கு துணை நிற்பதாக.//

கடைசி வரியில் நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன் மணியன் சார். ரொம்பச் சரியா சொன்னீங்க. இளைஞர்கள் கொண்டு வரவேண்டியது உடையில் மட்டுமான மாற்றம் மட்டுமல்ல.

மணியன் கூறுகிறார்

நன்றி குமரன்.