வானத்தில் ஒரு சரித்திரம்
சாந்திநிலையம் என்ற படத்தில் நாகேஷ் மற்றும் குழந்தைகள் வெப்பக்காற்று பலூனில் மேலே செல்லும் பாடல் காட்சி சிறுவயதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நானும் ஒருநாள் வானத்தின் மீதேறி போகவேண்டும் எனக் கனவுகளை ஏற்படுத்திய படமது.
அக்கனவு கனவாகவே நிலைத்துவிட்டாலும், நேற்றைய தினம் வெப்பக்காற்று பலூன் களத்திலே இந்தியாவின் பிரபல துணிவணிக மேதையும் aviatorஉம் ஆன திரு.விஜய்பத் சிங்கானியா 69,852 அடி உயரம் சென்று சாதனை படைத்தது என்னை சிறகடித்து பறக்க வைத்தது.
இதற்கு முன்னால் ஸ்வீடனைச் சேர்ந்த பெர் லின்ஸ்ட்ராண்ட்
என்பவர் 1988இல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் 64,997 அடி வரை பறந்ததே உலக சாதனையாக இருந்தது. குறைந்தது 17 பேராவது இச்சாதனையை முறியடிக்க முயற்சி செய்து தோற்றுள்ளனர். பலகோடி வருமானமுள்ள ரேமாண்ட் நிறுவனத்தின் அதிபரான சிங்கானியா தனது 67 வயதில் இச்சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத் தகுந்தது.கடந்த 40 வருடங்களாக பறந்து வரும் திரு. சிங்கானியா, 1988இல் லண்டனிலிருந்து
அஹமதாபாத்திற்கு 22 தினங்களில் சிறுவிமானத்தில் (micro light) தனியாகப் பறந்து சாதனை படைத்திருக்கிறார். Federation Aeronautique Internationale (FAI) வழங்கும் தங்கமெடலை 1994இல் வாங்கியுள்ளார். மேலதிக விவரங்களுக்கு
அவர் மட்டும் உயரே பறக்கவில்லை; இந்தியாவின் கௌரவமும்தான்.
அவருக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும்.
7 மறுமொழிகள்:
'சாதனைக்கு வயசு முக்கியமில்லை'ன்னு நிரூபிச்சிருக்கார்.
அவருடைய மன திடமும், செல்வமும் உதவி செஞ்சிருக்கு.
தகவலுக்கு நன்றி மணியன்.
இப்ப 'ஹாட் ஏர் பலூன் ரைடு' வந்துருச்சே மணியன். ச்சும்மா கொஞ்சதூரம் போகமுடிஞ்சாலும்நம்ம ஆசையைப் பூர்த்தி செஞ்சதாகுமே. நீங்க இருக்கற இடத்துலே இன்னும் இதுவரலையா? எங்கே இருக்கீங்க? அமெரிக்காவா?
சாதனைக்கு வயது ஒரு தடையல்ல, மனம்தான் முக்கியம் என்ற மூத்த சகோதரியின் கருத்துதான் என்னுடையதும்.
நன்றி துளசி கோபால், மூர்த்தி.
துளசி,கனவு நனவாக வாய்ப்பும் காலமும் வரக் காத்திருக்கிறேன்.
என்னங்க, முகப்பிலேயே இருக்கும் இடம் மும்பை,இந்தியா என இருக்கிறதே !
மணியன் நல்ல செய்தி
இந்தியர்கள் சாதனை படைக்கும் ஒவ்வொரு செய்தியுமே இனிப்பானது தான்.
பாராட்டுகள்
நன்றி நண்பரே.
///நானும் ஒருநாள் வானத்தின் மீதேறி போகவேண்டும் எனக் கனவுகளை ஏற்படுத்திய படமது///
சினிமா போடுறதுக்கு முந்தி முன்பெல்லாம் செய்தி போடுவாங்க.அதுல ஒரு பெண்மணி முதல்ல பைலட் ஆனது பாத்து
ரொம்ப நாள் பைலட் ஆகணும்-னு கனவு.
இது மட்டுமா இன்னும் எத்தனையோ.
ஏதோ எல்லாருமா நம்ம கனவ நனவாக்கி நம்மை சந்தோஷப்படுத்தறாங்க.
///அவர் மட்டும் உயரே பறக்கவில்லை; இந்தியாவின் கௌரவமும்தான்///
நன்றி மணியன்
வருகைக்கு நன்றி மதுமிதா.
மறுமொழியிட