வந்தனம்

வந்தனம் என்று சொல்லியே சபைக்கு நானும் வந்தேனைய்யா !!
தமிழ்மணத்தின் வாசத்தால் ஈர்க்கப் பட்ட இன்னொரு வண்டு.

இது நாள் வரை படித்து மகிழ்ந்திருந்த தமிழ்மணத்தில் பங்கு பெறவும் ஆசை வந்தது. எல்லோரும் வாங்க வாங்க என்று வரவேற்றாலும் எழுத ப்ளாக்கர் கணக்கு மட்டும் போதாதே !

பேசும் தமிழ் எழுத பழக இது நல்ல துவக்கம்.
குறைந்தது பின்னூட்டமிடவாயினும் இக்கணக்கு உபயோகமாயிருக்கும்.

9 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) கூறுகிறார்

வந்தனம் மணியன்...வருக வருக...

மணியன் கூறுகிறார்

நன்றி குமரன். உங்களின் பதிவுகளின் மூலம் அறிந்தும் அறியாமலும் கேட்டுவந்த பாடல்களின் அர்த்தங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

நான் தமிழ் இணையத்திற்கு ஈர்க்கப்பட்டதே forum hubல் வந்து கொண்டிருந்த கம்பராமாயண விளக்கவுரைகளினால் தான்.(தற்சமயம் dhool.comல் தொடர்கிறது)

Muthu கூறுகிறார்

welcome manian

ramachandranusha(உஷா) கூறுகிறார்

நீதானா அந்த குயில் :-)
வாங்க, வாங்க சீக்கிரமா சூப்பரா ஒரு பதிவு போடுங்க.

மணியன் கூறுகிறார்

நன்றி முத்து. இப்பதிவினைத் தொடங்க
உஷா அவர்களின் தூண்டுதல் முக்கியமான காரணமாகும். சிறப்பு நன்றிகள் அவருக்கு உரித்தாகும் என்றாலும் அதைச் சொல்லி அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை :)

தருமி கூறுகிறார்

புதுமலரின் வருகை - இங்கும், அங்கும் - இன்பமளிக்கிறது. வ்ருக, வருக...

மணியன் கூறுகிறார்

நன்றி தருமி அவர்களே. உங்கள் நட்சத்திர அழைப்பின் போதுதான் ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. உங்களுக்கும் என் நன்றிகள்.

ramachandranusha(உஷா) கூறுகிறார்

//உஷா அவர்களின் தூண்டுதல் முக்கியமான காரணமாகும். சிறப்பு நன்றிகள் அவருக்கு உரித்தாகும் என்றாலும் அதைச் சொல்லி அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை :)//

வாரவங்க எல்லாம் ஒரு மார்க்கமாதான் வாராங்கபா (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்):-)

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி மணிமலர்.