சோம்நாத் சாட்டர்ஜி - குடியரசுத்தலைவர் ?
தற்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் பணிக்காலம் ஜூன் 2007 இல் முடிவடைகிறது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து ஆதரவு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை டாக்டர் கரண்சிங்கின் பெயரையும் பிஜேபி துணை குடியரசுத் தலைவர் திரு.பைரோன்சிங் ஷெகாவத் பெயரையும் முன் வைத்துள்ளன. ஆனால் கு.த தொகுதியில் இருவருக்குமே உறுதியாக வெற்றி வாய்ப்பிற்கான வாக்குகள் எண்ணிக்கை இல்லாததை உணர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக மக்களவை சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பெயரை அரசியல் கட்சிகளிடம் தூது விட்டுக் கொண்டிருக்கிறது. திரு எச்சூரி இதுபற்றி பிஜேபி தலைவர்களை கலந்தாலோசித்திருப்பதாக தெரிகிறது.திரு. பிரகாஷ் கராட் சமாஜ்வாடி,தெலுகுதேசம்,NCP, RLD கட்சிகளுடனும் அவர் மனைவி பிருந்தா கராட் BSPயின் மாயாவதி, அதிமுக பொதுசெயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் பேசவிருப்பதாகத் தெரிகிறது.
நாட்டு நடப்பையும் குடியரசு தலைவர் தொகுதியின் எண்ணிக்கைகளையும் கணக்கில் கொண்டால் ஒரு பொதுவுடைமை கட்சி வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக வர நல்ல வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அடுத்த மத்திய தேர்தலில் மூன்றாம் அணி அமையுமானால் மார்க்ஸிஸ்ட் ஜனாதிபதியின் தயவில் அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்கவும் இயலும். இன்றுபோல் பின்னாலிருந்து ஆட்டி வைக்க வேண்டியதில்லை.
திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பத்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜார்கண்ட் தீர்ப்பின்போது உச்சநீதிமன்றத்துடன் முரண்பட்டு குடியரசுதலைவரின் சுட்டுதலுக்கு ( Presidential reference) வேண்டியவர். அவர் பணியாற்றும் சாந்திநிகேதன் ஸ்ரீநிகேதன் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் ஊதியம் (Office of Profit) பெறுவதாக குற்றம் சாட்டப் பட்டவர். இவரது தந்தை நிர்மல் சாட்டர்ஜி பிஜேபியின் முன்னோடியான அகில் பாரதீய இந்து மகாசபையின் தலைவராக இருந்ததும் குறிப்பிட தகுந்தது.
11 மறுமொழிகள்:
நல்லா அலசியுள்ளீர்கள்..
பார்க்கலாம் என்ன நடகின்றது என்று
நிர்மல் எவ்வளவு இந்துவோ அதே அளவு Anti-hindu ஸோம்நாத்.
Kalam should be given a second term.
சிவபாலன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வஜ்ரா: //நிர்மல் எவ்வளவு இந்துவோ அதே அளவு Anti-hindu ஸோம்நாத்.//
அது எப்படிஉறுதியாகச் சொல்கிறீர்கள் ?
மாநில போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி வெளியில் சொல்லி பிறகு வாபஸ் பெற்றதுபோல் "நான் முதலில் இந்து,பிராமணன் பின் கம்யூனிஸ்ட் " என்று காளிகோவிலுக்குப் பொவதில்லை என்று ? அவர் கொள்கைப் பிடிப்புள்ளவராக இருந்தால் நாட்டின் தலைமைக்கு ஏற்றவரே.
கலாமிற்கு இரண்டாம் வாய்ப்பு கிடைக்க சந்திரபாபு நாயுடு இல்லையே!தமிழர்கள் ஒன்று சேர்வார்கள் என்று நினைக்கிறீர்கள் ;)
//
அவர் கொள்கைப் பிடிப்புள்ளவராக இருந்தால் நாட்டின் தலைமைக்கு ஏற்றவரே.
//
That is another reason not to elect Chatterjee.
கம்யூனிஸ கொள்கையில் Country State கான்செப்டே தப்பு. இந்த கொள்கையில் பிடிப்பு உள்ள ஒரு ஆசாமி நாட்டின் முதல் குடி மகன் என்றால் நாடு வெளங்குமா?
அது கெடக்குது...ஒரு உதாரணம்,
வீர சாவர்கர்படத்தை பாராளுமன்றத்தில் வைத்தார்கள். அப்போது ஜோராக கை தட்டிவிட்டு. காங்கிரஸ் + காமீஸ் ஆட்சி வந்தவுடன் அது தப்பு என்று தர்க்கம் செய்தார்.
முதலில் முதல் குடிமகனுக்கு அரசியல் சார்பு இருக்கக் கூடாது. சாவர்கள் ஒரு சுதந்திரப் போராட்டவீரர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். பகத் சிங் என்னதான் கம்யூனிஸ்ட் என்றாலும் இந்திய சுதந்திரப் போர் வீரன் என்று அடிமட்ட RSS காரன் கூட ஒத்துக் கொள்வான். இந்த Broad outlook இல்லாமல் தன் கொள்கை தான் சிறந்தது என்றும் அடுத்தவனைத் தரம் தாள்த்தியும் பேசும் இது போன்ற ஆசாமிக்கு எல்லாம் பாராளுமன்றத்தில் Speaker சீட்டே அதிகம்.
வஜ்ரா, கம்யூனிசம் பற்றிய உங்கள் க்ண்ணோட்டத்துடன் நான் ஒத்துப் போகவில்லை. இருப்பினும் சோம்நாத் ஒரு controversial candidate என்றவகையில் உடன்படுகிறேன். அவர் பதவிக்கு வந்தால் அரசியலமைப்பு அதிகார மையங்களிடையே பிணக்குகள் எழுவது சகஜம் ஆகிவிடக் கூடும்.
//கலாமிற்கு இரண்டாம் வாய்ப்பு கிடைக்க சந்திரபாபு நாயுடு இல்லையே!தமிழர்கள் ஒன்று சேர்வார்கள் என்று நினைக்கிறீர்கள் ;)//
ஹிஹி...கலாம் அவர்களே இரண்டாம் வாய்ப்பு விரும்பாது மீண்டும் பணிக்குத் திரும்பவே விரும்புவதாகச் செய்திகள் வந்தன! இந்த வார ஜூ.வியில் இது பற்றி அலசி இருக்கிறார்கள்.
//முதலில் முதல் குடிமகனுக்கு அரசியல் சார்பு இருக்கக் கூடாது. இந்த Broad outlook இல்லாமல் தன் கொள்கை தான் சிறந்தது என்றும்// சாதிப்பவராக இருக்கக் கூடாது!
வஜ்ரா சொல்வதை வழிமொழிகிறேன். தீவிர கொள்கையாளர்கள், நல்லவராக இருப்பினும் கூட, அவர்களுக்கு கட்சிப் பதவிகள் கொடுத்து மரியாதை செய்யலாமே தவிர
இது போன்ற பதவி தருவது, பல நேரங்களில் சிக்கலில் தான் முடியும்!
வாங்க KRS , ஒரு இந்திய ஜனாதிபதி அரசியலமைப்பின்படி பணியாற்றும் வரை ஒரு சிக்கலிலும் முடியாது என எண்ணுகிறேன். இருப்பினும் இவரைப் பொறுத்தவரை அரசியலமைப்பு சட்ட நிபுணராக இருப்பதால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் போன்ற consttutional authorities உடன் conflicts வரலாம். கு.த தொகுதி (Presidential Constituency) இதையெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்கும் என நம்பலாம்.
Just an FYI : )
Lost in Media: India Speaker rebuked on spending
வாங்க பாபா. மக்களவைக்கு சரியான தலைவர்தான் :))
CPI-M பேசாமல் ஒரு JNU இடதுசாரி முனைவரை முன்னிறுத்தலாம்.
//
CPI-M பேசாமல் ஒரு JNU இடதுசாரி முனைவரை முன்னிறுத்தலாம்
//
"CPI-M பேசாமல்" இருக்கவேண்டுமே...அது நடந்தால் உங்கள் வாய்க்கு 100 கிலோ சர்க்கரை! :D
வஜ்ரா, இன்றைக்கு நாட்டில் உருப்படியான எதிர்கட்சியாக செயல்படுவது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான். மற்றவர்களைப் போல அங்கும் குறைகளும் களங்கங்களும் இருக்கலாம். இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள ஒரே புகலிடம் அவர்கள்தான். உலகளாவிய மாற்றங்கள் அவர்களையும் liberalஆக ஆக்கியிருக்கிறது.
எனது அறிவு மன்மோகனாமிக்ஸிற்கு ஆதரவு கொடுத்தாலும் இதயம் பொதுவுடமை கொள்கைகள் பக்கமே ஈர்க்கிறது.
மறுமொழியிட