சயனைட் - அந்த கடைசிநாட்கள்

இராஜிவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசு மற்றும் சுபா பெங்களூரில் கழித்த நாட்களையும் கடைசியில் அவர்களது பரிதாப முடிவினையும் அடிப்படையாகக் கொண்டு சென்னை திரைப்படக்கல்லூரி முன்னாள் மாணவரும் கன்னட இயக்குனருமான திரு AMR ரமேஷ் 'சயனைட்' என்னும் கன்னடப் படத்தை வெளியிட்டிருக்கிறார். இங்கு நடக்கும் ஆசிய திரைப்பட விழாவில் இந்தியப் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்தப் படம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மராத்தி நடிகர் இரவி காலே சிவராசனாகவும், நடிகை மாளவிகா சுபாவாகவும், நடிகை தாரா மிருதுளாவாகவும் கன்னட நடிகர் ரகு இரங்கநாத்தாகவும் அசல் பாத்திரங்களை உருவிலும் நடையிலும் ஒட்டி நடித்திருப்பதாக புகழுரைகள் சொல்கின்றன. பாடல்களே இல்லாத 115 நிமிட படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

இங்கு பேட்டியளித்த இயக்குனர் ரமேஷ் இதனை இந்தியில் அமிதாப்பை வைத்து எடுக்க திடமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் "The film is not about Rajiv Gandhi, but about Sivarasan and Shubha who are on the run after the assassination to escape the police dragnet. It is an attempt on my part to authentically capture the human drama that ensues in the last 20 days in the lives of the LTTE assassins" என்று சொல்கிறார்.

யாரையும் குறைசொல்லாது, கொலையாளிகளின் கடைசி மன அழுத்தங்களை சித்தரிப்பதாக அவர் கூறுவதை படத்தைப் பார்த்த நமது கர்நாடக பதிவர்கள் சரியா என பதியவேண்டும். குறைந்தது பின்னூட்டத்திலாவது தெரிவிக்கலாம்.

9 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

// நமது கர்நாடக பதிவர்கள் //
:))) அது சரி :)

வேந்தன் கூறுகிறார்

விகடனில் இருதடவை இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருக்காங்க. தமிழில் குப்பி என்று ரீமேக் பண்ணிட்டு இருப்பதா கேள்விப்பட்டேன்

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ். என்ன சிரிக்கிறீங்க, கர்நாடகாவிலேயிருந்து பதியும் தமிழ்பதிவர்களை அப்படி குறிப்பிட்டேன். நீங்க பழமைவாதிகள் என்று நினைத்துக் கொண்டுவிட்டீர்களோ ?

வாங்க வேந்தன். தகவலுக்கு நன்றி.

ramachandranusha(உஷா) கூறுகிறார்

மணியன், இந்த வார விகடனில் இந்த செய்தி வந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் எழுதுங்கப்பா!

மணியன் கூறுகிறார்

வாங்க உஷா, இங்கே மும்பையில் இது Asian Film festival இல் Indian vista பகுதியில் திரையிடப் பட்டுள்ளது. நேரம் கிடைக்காததால் படம் பார்க்க முடியவில்லை. இல்லையென்றால் நானே விமர்சனம் எழுதியிருப்பேன். பத்திரிகை விமரிசனங்கள் நல்ல படம் என பாராட்டியுள்ளன.

Karthik Srinivasan கூறுகிறார்

I saw this movie a couple of months back! Excellent movie, it is. (I could understand close to 70% of the Kannada dialogues too!)

It should have actually been more of a Tamil movie since most of the characters in it are Tamils! :)

The film revolves around a couple in whose house Sivarasan & Co stay for those 20 days! More than the "mana azhuththam" of the assassins, it portrays the emotions of this couple in an excellent manner!

The couple (at least the husband)are (is) sympathiser(s) of LTTE when they lived in Europe! That haunts them after moving to Bangalore since Sivarasan wants to stay with them!!

I heard that the director of the movie is a family friend of the (real life) couple!! The husband (guess one Mr Ranganathan) was in jail for long & has been released. The wife has already expired it seems!!

Worth a watch. Hope "Kuppi" comes soon when I can understand the rest of 30% dialogues too :)

மணியன் கூறுகிறார்

வாங்க கே எஸ். ஒரு முழுமையான விமரிசனத்தைக் கொடுத்ததிற்கு நன்றி.

ஐ.ஐ.எம்மில் மிகவும் நேரக்கெடுபிடியோ, ஜூனிற்குப் பிறகு உங்கள் பதிவுகளைக் காணோம். நன்றாக கதை எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

Karthik Srinivasan கூறுகிறார்

நன்றி மணியன்.

ஆமா மணியன். ஜூன்லேந்து சும்மா நாக்கு தள்ளுது :)

(I chanced upon this page again today to show your post to a friend. Was surprised to see a reply to my comment. BTW, how do you know about my IIM thing? From my English blog, probably, right?)

மணியன் கூறுகிறார்

மீண்டும் வருகைக்கு நன்றி Kay Yes.
(Yes, indeed. I went through your blogs and liked them.)