இந்தி தேசிய மொழியா ?

இந்தி தேசீய மொழியானது எப்படி என்று simulation என்பவர் தமது பதிவில் வினா எழுப்பி யிருந்தார். இதற்கு முன்னரும் இத்தகைய ஒரு வினா எழுப்பப்பட்டது. அரசியலமைப்பு எட்டாம் ஷெட்யூலில் உள்ள அனைத்து மொழிகளும் தேசீயமொழிகள்தாம். ஆனால் Official language எனப்படும் ஆட்சிமொழியாக இந்தியக் கூட்டமைப்பிற்கு (Union) இந்தியும் அதனுடன் பதினைந்து வருடத்திற்கு ஆங்கிலமும் அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ளன. மாநிலங்களின் ஆட்சிமொழியை அவர்களே தேர்ந்தெடுக்க விட்டுள்ளனர். இதன்படி மைய அரசின் அனைத்து ஆணைகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப் படவேண்டும். அரசிலமைப்பு பிரிவு 343படியே பதினைந்து வருடம் கழித்து 1965 ஜனவரி 26 அன்று முதல் ஆங்கிலம் இனி ஆட்சிமொழியல்லவென்றும் இந்தி மட்டுமே கூட்டமைப்பின் மொழி என்று அறிவிக்கப் பட்டது. இது தமிழகத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அரசியலமைப்பில் இந்தி பேசாதவர்கள் விரும்பும்வரை ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக தொடர திருத்தம் நிறைவேற்றப் பட்டது. ஆகவே இன்றைய நிலையில் இந்தியும் ஆங்கிலமும் ஆட்சிமொழிகளே.

நமது அரசியலமைப்பு அவை (Constituent Assembly) 1946ல் ஏற்படுத்தப் பட்டது. அதன் அவைத் தலைவராக மேதகு இராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் சிறுசிறு மன்னர்களின் பிரதிநிதிகளும் இவ்வவையில் இருந்தனர். கிட்டதட்ட மூன்றாண்டுகள் அரசியலமைப்பின் ஒவ்வொரு பிரிவாக விவாதித்து சட்டமியற்றினர். பாபாசாகெப் அம்பேத்காரின் பங்காற்றலை அனைவரும் அறிவர். அந்த அவையில் 14 செப்டெம்பர் 1949 அன்று இந்த 343 பிரிவு விவாதத்திற்கு வந்தது. கிட்டதட்ட 14 மணிநேரம் காராசாரமான விவாதம் ( பொறுமையுள்ளவர்கள் முழு விவாதத்தையும் படிக்கலாம்)நடந்தது. இதற்கு முன்னரே மகாத்மா காந்தி இந்தியின் எளிமை காரணமாக இந்தியாவின் தேசியமொழியென கருத்து பரப்பி வந்தார். தென்னிந்தியாவில் தக்சிண பாரத இந்தி சபை நிறுவப்பட்டு, தனது செல்வாக்கால் பலரை இந்தி கற்க தூண்டினார். தவிர அரசியலைப்பு அவையிலும் அவரது காங்கிரஸ் பெருநிலை வகித்ததால் கூட்டமைப்பின் ஆட்சிமொழியாக இந்தியை கொண்டுவர அதிகம் எதிர்ப்பில்லை. ஒரு வோட்டு வித்தியாசத்தில் எல்லாம் இல்லை). இருப்பினும் தென்னிந்திய பிரதிநிதிகளின் முயற்சியாலேயே ஆங்கிலமும் இணைமொழியாக 15 வருடம் இருக்க ஒப்புகொள்ளப் பட்டது. மற்றொரு வெற்றி, எண்கள் உரோமானிய குறியீட்டில் இருக்க வேண்டுமென்பது. இல்லையென்றால் இந்தி குறியீடுகளாக இருந்திருக்கும்.

அரசியலைப்பில் உரோமானியக் குறியீட்டில் இருக்கவேண்டும் என்று இருந்தாலும் இங்கெல்லாம் பேருந்துகளில் இந்தி குறியீடுகளைப் பயன்படுத்தி நம்மைக் கடுப்படிப்பது வேறு விதயம் :(

18 மறுமொழிகள்:

Amar கூறுகிறார்

நல்ல பதிவுங்க.

மொழியினால் துண்டாடபட்ட இரண்டு நாடுகள் நமக்கு அருகாமையிலேயே உள்ளன.

இந்தியா போன்ற ஒரு Federal நாட்டில் பிரதேச autonomy மிகவும் முக்கியம்

மணியன் கூறுகிறார்

நன்றி சமுத்ரா. சுதந்திரம் பெற்ற சூழலில் நடைபெற்ற நிகழ்வுகளை பதியவே இந்த இடுகை.

Muthu கூறுகிறார்

//1965 ஜனவரி 26 அன்று முதல் ஆங்கிலம் இனி ஆட்சிமொழியல்லவென்றும் இந்தி மட்டுமே கூட்டமைப்பின் மொழி என்று அறிவிக்கப் பட்டது. இது தமிழகத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. //

தமிழனை தவிர யாருக்கும் ரோசமே இல்லையா நாட்டில....

மணியன் கூறுகிறார்

நன்றி முத்து (தமிழினி).பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸே ஆட்சியிலிருந்ததாலும் எதிர்கட்சிகள் அவ்வளவு வலு பெறாததாலும் எங்கும் முணுமுணுப்புத் தான். தமிழ்நாட்டிலும் அரசியல்கட்சிகள் எதிர்குரல் எழுப்பினாலும் கிளர்ந்தெழுந்தவர் மாணவர்களே. மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்று அனைத்து கட்சியினருக்கும் எடுத்துக் காட்டிய ஒரு நிகழ்வாகும்.

-L-L-D-a-s-u கூறுகிறார்

இவை இந்திய அரசுத்துறைகளின் சுட்டிகள்
http://www.cia.gov/cia/publications/factbook/geos/in.html

http://www.nlindia.org/collection.html

இதில் ஹிந்திதான் national Language என குறிப்பிட்டுள்ளதை கவனியுங்கள் .

National Laguageக்கும் official languageக்கும் வித்தியாசம் இருப்பதே பலருக்குத்தெரியவில்லை . தமிழராயில்லாதவற்கு இதில் அக்கரையேயில்லை ... உணவுநேர விவாதத்தில் தெலுகுவிடமிருந்து வந்த வார்த்தை ' தமிழ்நாட்டில் வேண்டுமானால் ஹிந்தி தேசிய மொழியாக இல்லாமலிருக்கலாம் .. ஆந்திராவின் தேசிய மொழி ஹிந்தி' ..ஐயோ..!!!thamiz fanatic என்ற பட்டம் எனக்கு வந்ததுதான் மிச்சம் ;)

மணியன் கூறுகிறார்

வாங்க தாஸ்,
என்ன செய்வது,
misinformation is the order of the day.
தமிழரைத் தவிர மற்றவரின் apathy இந்த தவறான செய்தி பரவலை எளிதாக்குகிறது.

குமரன் (Kumaran) கூறுகிறார்

நல்ல பதிவு மணியன் சார்.

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி குமரன்.

Costal Demon கூறுகிறார்

மிகவும் நல்ல பதிவு...

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி,ராம்குமார்.
உங்கள் உகாண்டா அனுபவங்களை அழகாக எழுதுகிறீர்கள்.தொடருங்கள்.

யாத்ரீகன் கூறுகிறார்

ஆக.. Official Language-களில் ஒன்றாகத்தான் தமிழ் உள்ளதா ?

சாணக்கியன் கூறுகிறார்

மிக முக்கியமான பதிவு. நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களுக்கான இணைப்பை கொடுத்ததற்கு நன்றி...

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி யாத்ரீகன் மற்றும் சாணக்கியன்.

யாத்ரீகன், Official language என்பது ஆட்சிமொழியாகும்.அது
மைய அரசிற்கு இந்தியும் ஆங்கிலமும்தான். தமிழ்நாட்டிற்கு தமிழும் ஆங்கிலமும்.

தேசியமொழிகளில் ஒன்று தமிழ்.

நற்கீரன் கூறுகிறார்

According to stats Hindi spoken as first or second language by about 450 million people world wide, and that puts Hindi among the top five. Hindi is said to be a simple, and musical language. However, advancement of Hindi has had devastating to consequences to other North Indian languages. Although, South India was protected by some forward thinking people, and the relative prosperity of South can be attributed to the three language policy of the Southern states.

Currently, however, people are giving up on Tamil. It is sad to see that. Even populations with small population of speakers, and very short written history are striving to revive their language (example: Canada: Nunavut: Inuktitut language: population about 27 000, and more in Greenland, Ihttp://www.gov.nu.ca/). There are artificial languages being created and taken up by more than millions of people. Then why do Tamils have this apathy. Is it simply economics, or is it ignorance. I am not sure.

Interesting post.

மணியன் கூறுகிறார்

நன்றி நற்கீரன். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். பழமையும் நன்னூல்களையும் கொண்டும் புதுமைக்கு ஈடுகொடுத்தும் விளங்கும் தங்கள் மொழியை பாராட்டத் தெரியாமல் இருப்பது அறியாமையாலேயே.

நான் இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருந்ததால் உங்கள் பின்னூட்டம் இத்தனை நாள் பின்தங்கிப் போயிற்று. மன்னிக்கவும்.

நற்கீரன் கூறுகிறார்

இப்பொழுதுதான் கவனித்தேன், எனது மறுமொழி ஆங்கிலத்தில் இருந்தது எனறு, என்னவென்று சொல்வது எம்நிலையை :-)

Doctor Bruno கூறுகிறார்

//தமிழனை தவிர யாருக்கும் ரோசமே இல்லையா நாட்டில....//
In hindsight, the (attempt at) forced imposition of Hindi 1965, was a blessing in disguise for south india. They totally embraced English at that point. Because of that, south india as a whole and Tamil Nadu in particular (because there was no Hindi, English became a necessity in Tamil Nadu) has been able to come up in Information and technology by leaps and bounds.

Maharashtra thought that Hindi wil "Closer to them than English" and (erroneously) preferred Hindi to English. As a result, they are not able to compete against the those of Hindi heartland in the "Hindi Play ground" and they are not able to compete with South Indians in the "English pay ground"

I will give one more example

1. What is the population of Maharashtra and what is the population of people whose mother tongue is Marathi
2. What is the population of Tamil Nadu and what is the number of people whose mother tongue is Tami;
3. How many Marathi movies were produced in 2005. How many marathi dailies do you have. how many marathi weeklies do you have
4. How many tamil movies were produced in 2005. How many tamil dailies and how many tamil weeklies
5. How many blogs in Marathi
6. How many blogs in Tamil.

You should know that Tamil Nadu was also supressed by the British. Yet Tamil Nadu has come up because of the reason that Tamilians embraced English whole heartedly. They know only two languages. Tamil, their mother tongue and English, a "foreign" language which they always keep it as the "second" language.

WHere as in Maratha, There are two languages in contention for the "first language" spot as said in

http://save-maharashtra.blogspot.com/2005_12_01_save-maharashtra_archive.html#113585467561905474
http://save-maharashtra.blogspot.com

The situation is gone so beyond imagination that "Hindi" has replaced Marathi as general communication language in large part of Vidharbha(epecially Nagpur,Amravati,Bhandara,Gondia etc.) Some part of Marathwada(Nanded,Aurangabad etc.) and entire Mumbai.

//http://www.cia.gov/cia/publications/factbook/geos/in.html//
(At least) The above link is not from Indian Government :)

//National Laguageக்கும் official languageக்கும் வித்தியாசம் இருப்பதே பலருக்குத்தெரியவில்லை . தமிழராயில்லாதவற்கு இதில் அக்கரையேயில்லை ... //
Exactly... and that is the reason Gujarathi, Punjabi and other languages are SLOWLY dying - reducing numbner of movies - dwindling newspapers and periodicals - they are in fact losing ways to record their contemporary history.

//misinformation is the order of the day.
தமிழரைத் தவிர மற்றவரின் apathy இந்த தவறான செய்தி பரவலை எளிதாக்குகிறது.//
Yes... Yes... And of late few people have awakened

//ஆக.. Official Language-களில் ஒன்றாகத்தான் தமிழ் உள்ளதா ?//
Hindi and English are the official languages. Tamil is ONE OF THE national language


//However, advancement of Hindi has had devastating to consequences to other North Indian languages.//
This is what I too had observed

மணியன் கூறுகிறார்

டாக்டர் ப்ரூனோ, அருமையான அலசல். கூடவே தமிழ் கொலை பற்றி உங்கள் இடுகையும் பார்த்தேன். கருத்தொருமித்தவர் கூடும் இடமாக வலைபதிவுகள் விளங்குகின்றன.மிக்க நன்றி