மலையாள 'ழ'
இன்றைய நாளேட்டில் ரச்சனா என்ற பெயரில் மலையாளத்தில் லினக்ஸ் இயங்குதளம் வெளியிடப்படுவதாக படித்தேன். திரு. K.H ஹூசைன் தலைமையிலான நான்குபேர் குழு இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லூடக ஆதரவுடன் முழுகணினியாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும் செய்திதுண்டிலிருந்து அது எவ்வகையான l10n என்று தெரியவில்லை, எழுத்துரு பற்றியும் பேசுகிறது.
மலையாளத்தில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே அத்தகைய கணினி முதலில் வெளிவருவதாக குறிப்பிடப் பட்டிருப்பது சிறிது நெருடலாகவே உள்ளது. வெகுநாட்களாக வெங்கட், முகுந்த் என்று ஒருபக்கமும் ஜெயராதா, சிவக்குமார் என்று ஒருபக்கமும் தமிழ்முயல்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்க குழுக்களும் forkingகும் இல்லாமல் அவர்கள் முந்திக் கொண்டார்களே என்று வருத்தமாயிருக்கிறது. 'ழ' கணினியின் இணையதளமே காணவில்லை. இலங்கையின் மயூரன் சிங்கள/தமிழ் கணினி வெளிவருவதாகச் சொன்னார். இப்போதைய நிலை தெரியவில்லை.
சேரநாடும் முத்தமிழ்நாடே, மலையாளமும் செந்தமிழே என்று அந்த நால்வருக்கும் ( ஹுசைன், கங்காதரன், ராஜிவ் செபாஸ்டியன்,சித்ரஜாகுமார்) நம் பாராட்டுக்கள்.
2 மறுமொழிகள்:
//சேரநாடும் முத்தமிழ்நாடே, மலையாளமும் செந்தமிழே என்று..// avangka kitta cholli pAththeengalA?
:) நம்மால் முடியவில்லை என்றால் மாற்றான் வீட்டையும் சொந்தம் கொண்டாட வேண்டியதுதான்.
வருகைக்கு நன்றி ரோசாவசந்த்.
மறுமொழியிட