இரங்கல்


கோண்டு (TMS)
மறைவு :30 ஜுன்2005

கனவுகள் கண்டோம் கல்லூரியில்
கவலைகள் மறந்தோம் கூட்டாக;
கோவில்கள் இங்கிங்கே என்றேதான்
வழி சொல்லி காண்பித்தாய் மும்பையெல்லாம்.

ஆதரவற்றோருக்கு துணையாக
அடுத்தவர் தோல்விக்கு தோளாக
வெற்றிக்கு வித்திடும் ஊக்கமாக
வாழ்வெல்லாம் வாழ்ந்திட்ட எம்மான் நீ !

இரங்கல் எழுதிடும் நாள் வந்ததென்ன,
இனி நீ யின்றி நான் செய்வதென்ன,
வருகிறேன் என சொல்ல மறந்தாய் நீ
போகிறேன் என்பதோ நம் நட்பு!

காலனும் பிரிக்காத இணை யென்றே
காலமெலாம் இருப்பதுவும் கனவாச்சே!
காத்திருப்பாய் மேலெங்கோ சென்றவிடத்தில்
நான் வரும் வேளைவரை வழி சொல்ல!

இன்று எனது அருமை நண்பன் கோண்டு என அழைக்கப்படுகின்ற T M சுப்ரமணியனின் முதலாமாண்டு நினைவு நாள். ஐ.ஐ.டியில் இணைந்து கொச்சியிலும் மும்பையிலும் ஒருசேர பணிபுரிந்து வாழ்வில் பின்னிப் பிணைந்தவர் திடீரென மாரடைப்பால் சென்றவருடம் இதேநாள் இறைவனடி எய்தினார். அவரது ஆன்மா சாந்தியடையவும் குடும்பத்தினரின் துக்கத்தை ஆற்றுமுகமாகவும் அவரை நினைவு கூர்ந்து இந்த இடுகையை அர்ப்பணிக்கிறேன்.


8 மறுமொழிகள்:

துளசி கோபால் கூறுகிறார்

மனமார்ந்த அனுதாபங்கள்

நாகை சிவா கூறுகிறார்

அழந்த அனுதாபங்கள்

நாமக்கல் சிபி கூறுகிறார்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

கோவி.கண்ணன் கூறுகிறார்

//காத்திருப்பாய் மேலெங்கோ சென்றவிடத்தில்
நான் வரும் வேளைவரை வழி சொல்ல!//
நட்பின் ஆழத்தை நயமாக சொல்லியிருக்கிறீர்கள்...
உங்கள் வருத்தத்தில் பங்கெடுக்கிறேன்

siva gnanamji(#18100882083107547329) கூறுகிறார்

தனக்கு ப்ரியமானவர்களை இறைவன்
சீக்கிரமே அழைத்துக்கொள்கிறான்

VSK கூறுகிறார்

உள்ள உணர்வினின்றே
கவிதை ஊற்றெடுக்கும் என்பதற்கு
இன்னுமோர் எடுத்துக்காட்டு.

உங்கள் வலியை உணர முடிகிறது.
நல்ல நண்பர்களைப் பெற்றவனே பணக்காரன் என யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

வெற்றி கூறுகிறார்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

/* ஆதரவற்றோருக்கு துணையாக
அடுத்தவர் தோல்விக்கு தோளாக
வெற்றிக்கு வித்திடும் ஊக்கமாக
வாழ்வெல்லாம் வாழ்ந்திட்ட எம்மான் நீ ! */

நட்பின் இலக்கணமாக திகழ்ந்திருக்கிறார் உங்களின் நண்பர் என்பது உங்களின் இவ் வரிகளில் இருந்து புரிகிறது.

மணியன் கூறுகிறார்

எனது சொந்த துயரத்தில் பங்கு கொண்ட துளசிகோபால், நாகை சிவா, நாமக்கல் சிபி, கோவி.கண்ணன்,சிவஞானம்ஜி, எஸ்கே மற்றும் வெற்றி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.