அபூர்வ ராகங்கள் ?
இன்று வெளியாகியுள்ள அமிதாப் பச்சனின் புதிய படம் 'நிசப்த்'(சப்தமில்லாமல்) இங்கு சர்ச்சைக்குள்ளாகி சப்தங்களை கிளப்பி விட்டுள்ளது. அறுபது வயது குடும்பத்தலைவருக்கும் (அமிதாப்) பதினெட்டு வயது பெண்ணின் தோழிக்கும் (ஜியா கான்) ஏற்படும் வயதைத் தாண்டிய காதலை விவரிக்கிறது படம். அழகான தேயிலைத் தோட்டத்தில் அன்பான மனைவியுடன் ( ரேவதி) வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது தன் மகளுடன் விடுமுறைக்கு வரும் தோழி ஜியாவிடம் நட்பாக ஆரம்பித்த உறவு காதலாக மலர்கிறது. தமிழ் இரசிகர்கள் பாலச்சந்தரின் ஆபூர்வ இராகங்களிலேயே இத்தகைய வயது மீறிய காதல்களை அங்கீகரித்திருந்தாலும் இங்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் கதையில் மைத்துனர் (நாசர்) அறிவுரையில் கடைசியில் ஜியாவை அவள் தோழனுடன் சேர்த்து அனுப்பி தான் சோகத்தில் ஆழ்வதாக முடிகிறது. இராம் கோபால் வர்மா மற்றுமொரு வழக்கத்திற்கு மாறான படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த சர்ச்சையின் உச்சகட்டமாக அறிமுக இயக்குநர் ஆர்.பாலகிருஷ்ணனின் 'சீனி கும்' படமும்் இந்த கருவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதிலும் அமிதாப் தான் நடிக்கிறார். நிசப்த்தில் போடோகிராபர், இதில் போனிடைல் சிகை (a la ஹரிஹரன்) அலங்காரத்துடன் சமையற்காரன். தனது 34 வயது எஜமானியுடன் (டாபு) காதல். ஒரே கதை கொண்ட இரு திரைப்படங்கள் எப்படி அமிதாப் ஒத்துக் கொண்டார் ? தவிர RGV தன் பேட்டியில்்அமிதாப் அமிதாப் தன் படமொன்றின் கதை வயதான ஆணிற்கும் பருவப் பெண்ணிற்கும் உள்ள உறவை ஒட்டியது என்றதே தனது இந்த கதைக்கருக்கான வித்து என்று கூறியிருப்பது அமிதாப்பின் பணிநேர்மை (professionalism) பற்றி கேள்வி எழுப்புகிறது.
அமிதாப்பைப் பொறுத்தவரை வரலாறு மீண்டும் எழுதப் படுகிறது. இதற்கு முன்னால் 'டூ ஃபான்' மற்றும் 'ஜாதுகர்' என்ற இருபடங்கள் இரண்டிலும் அமிதாப் மந்திரவாதியாக நடித்து அடுத்தடுத்து வந்து தோல்வியடைந்தது. அதேபோல் இந்த இருபடங்களும் தோல்வியைத் தழுவுமா ? அதிலும் ஆர்.பாலகிருஷ்ணன் அறிமுக இயக்குநர் என்பதால் கிடைக்கும் முதல் அடியைத் தாங்க முடியுமா ?
முடிவை வெள்ளித்திரையில் காண்க ?
நன்றி: பி.பி.சி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ்
3 மறுமொழிகள்:
மணியன் சார்,
Blame it on Rio என்ற ஒரு பழைய படக் கதையை ஒத்து இருக்கிறது. அந்த படத்தில் இரு நடுத்த்ர வயது நண்பர்கள் தத்தம் டீன் ஏஜ் பெண்களுடன் ரியோ டி ஜெனீரொவிற்கு விடுமுறைக்கு செல்வார்கள். அதில் ஒருவருக்கும் நண்பரின் மகளுக்கும் காதல் அரும்பிவிடும். கடைசியில் பெண்ணை அவளின் நண்பனிடம் சேர்த்துவிடுவார்கள். படத்தில் கிளூகிளு காட்சிகள் அதிகமிருந்ததால் மதுரையில் பிய்த்துக் கொண்டு ஓடின படம்
நன்றி கால்கரி சிவா. இதிலும் ஆர்ஜிவீ பாணியில் ( ரங்கீலா நினைவிருக்கிறதா ?) கிளுகிளு காட்சிகள் ஜியா தயவால் உண்டு.
நல்லா எழுதுறீங்க முக்கியம்மா திரைபடங்கள பற்றி ..அப்புறம் அமிதாப்க்கு இதெல்லாம் தேவையான்னு ஒரு சில டைம் தோனுது எனக்கு
நம்ம பக்கத்துக்கு வாங்க ஒரு தபா
மறுமொழியிட