மும்பையிலிருந்து...
பி ஜே பி யின் பொது செயலர் திரு பிரமோத் மகஜன் இன்று காலை 8 மணி அளவில் அவரது கடைசி தம்பி பிரவீனால் அவரது வொர்லி அடுக்கத்தில் சுடப்பட்டார். அவரது உடல்நிலை இதுவரை கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. இருவருக்கும் இடையே நடந்த சூடான வாக்குவாதத்ஹைத் தொடர்ந்து , அவரை விட பத்து வயது குறைந்த தம்பி அவரின் நெஞ்சை குறி வைத்து சுட்ட குண்டுகள் அவரது வயிற்றின் மேல்பாகத்தில் நுழைந்து கல்லீரல், கணையம் மற்றும் IVC எனப்படும் இரத்த க்குழாய்பகுதிகளில் பாதித்திருப்பதாக தெரிகிறது. அருகிலிருந்த ஹிந்துஜா மருத்துவமனையில் நன்கு மணிநேரம் நடந்த அறுவை சிகிட்சை மூலம் இரத்தப் போக்கை பெருமளவில் தடுத்திருந்தாலும், அவர் நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. குண்டுகளை வெளியில் எடுப்பது மேலும் சிக்கலானதால் உள்ளேயே விடப்பட்டுள்ளன. தற்போது தீவிர சிகிட்சைப் பிரிவில் மருதுவம் பார்க்கப் படுகிறது.40 பாட்டில் இரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் சர்க்கரை நோயும் மருத்துவ சிகிட்சையை கடினமாக்குகிறது.
பிரவீன் மகஜன் தானேயில் ஒரு கட்டிட கான்டிராக்டராக இருந்துவருகிறார். குற்றம் நடந்த சமயம் பிரமோத்தின் மனைவியும் மற்ற சில உறவினர்களும் உடன் இருந்து நேரில் கண்டுள்ளனர். பிரவீன் போலீசில் சரணடைந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட விவாதத்தின் காரணம் குறித்து பல வதந்திகள் உலா வருகின்றன.
மகஜன் பிஜேபியின் துடிப்பான கலகலப்பான தலைவராக விளங்குபவர். இன்றைய தொலைதொடர்பு சாதனைகளுக்கு வித்திட்டவர். பிற்போக்கானகட்சியில் இருந்தாலும் முற்போக்கு கொள்கைகள் கொண்டவர். அவர் நலம் பெற வேண்டி கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மராட்டியருமே இன்று பிரார்த்தனை செய்கின்றனர். நல்லவர் வாழ நாமும் வேண்டுவோம்.
கொசுறு : கடந்த இருநாட்களாக இங்கு மக்கள் பொது பேருந்து சேவை வழங்கும் பெஸ்ட் நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தால் பெரிதும் அவதி உறுகின்றனர். ஆனால் நாளிதழ்களில் ஐஸ்வர்யாராய், மணிரத்தினத்தின் குரு படபிடிப்பிற்காக பாதாமில் சைக்கிள் ஓட்டப் பழகும் போது கீழே விழுந்து கை சுளுக்கிக்கொண்டதற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். மும்பைவாசமே தனிதான் !!
3 மறுமொழிகள்:
இலண்டனிலிருந்து உலகத்தின் முதன்மையான மாற்று கல்லீரல் மருத்துவர் டாக்டர் முகமது ரெலாவும் ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்டீவன் டீனும் மகஜனின் சிகிட்சைக்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் டாக்டர் ரெலா நம் மாயவரத்துகாரர். ஸ்டான்லி மாணவர். இவர் பற்றிய சுட்டி
test
துடிப்பான இளம் தலைவராக அறியப் பட்ட மகஜனின் இழப்பு வருத்தமளிக்கிறது. அவரது ஆன்மா சந்தியடையட்டும்
மறுமொழியிட