வென்று வந்தீர், நன்று!நன்று !!
18ஆவது காமன்வெல்த் விளையாட்டுக்கள் நேற்று முடிவடைந்தது. இந்தியா 50 மெடல்களை ( 22 தங்கம், 17 வெள்ளி, 11 வெங்கலம்) பெற்று நான்காம் இடத்தை எட்டியுள்ளது.
இந்திய துப்பாக்கி வீரர் சமரேஷ் ஜங் ஐந்து தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களை வென்று இப்போட்டியின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். மற்றுமொரு போட்டியில் துப்பாக்கி வேலை செய்யாமல் பதக்கம் இழக்காமல் இருந்திருந்தால் ஒரு சரித்திரமே படைத்திருப்பார். அவருக்கு இப்போட்டியின் முதலாம் டேவிட் டிக்சன் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது.அவரது மனைவியும் பெண்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றிருப்பது பாராட்டிற்குறியது.மொத்தத்தில் துப்பாக்கி சுடுதலில் 16 தங்கங்களை இந்தியா வென்றுள்ளது.அகில்குமார் குத்துசண்டையிலும்,பெண்களுக்கான பளு தூக்குதலில் கீதா,குஞ்சுராணி, ச்சானு ஆகியோர் மூன்று தங்கங்களும் டேபிள் டென்னிசில் இரண்டு தங்கங்களும் கிடைத்துள்ளன.
உலக அலவிலான போட்டி இல்லை என்ற விமர்சனம் நிலவினாலும் இப்போட்டியின் வரலாற்றில் இதுவே இந்தியாவின் அதிகமான சாதனை என்பது மகிழ்ச்சிக் குறியது. கிரிக்கெட்டே பிரதானமாக கொண்டு இயங்கும் இந்திய ஊடகங்களில் நேற்றைய இறுதிவிழா கவரேஜில் பாலிவுட் தாரகைகளின் பங்கே அதிக முக்கியத்துவம் கொண்டிருந்தது. நமது பதக்கவீரர்களின் படங்கள் கூட காணவில்லை. இந்த அளவு ஊக்குவிக்கும் இந்திய சூழலில் இவ்வீரர்கள் கொணர்ந்திருக்கும் பதக்கங்கள் இனிமையானவை. அஞ்சு ஜார்ஜின் தோல்வி ஒரு ஏமாற்றமே என்றாலும் வரவிருக்கும் 2010 தில்லி விளையாட்டுகளுக்கு நல்ல முகமனாக இச்சாதனைகள் அமைந்துள்ளன. ஓரிரு நிகழ்வுகள் இந்திய மானத்தை வாங்கினாலும் 2006 விளையாட்டுக்கள் ஒரு மைல்கல்லே.நமது வாழ்த்துக்கள்.
6 மறுமொழிகள்:
இல்லைங்க, இதவிட மென்ச்ஸ்டரல 2002, அதிக பதக்கங்கள் வாங்கினோம். 69ன்னு நினைக்குறேன். பெண்கள தங்கம் வாங்கின ஹாக்கி இறுதிப்போட்டி குறிப்பிடத்தக்கது
வருகைக்கு நன்றி பட்டினத்து ராசா. நீங்கள் கூறுவது சரியே. மான்செஸ்டரில் 69 பதக்கங்கள் (30 தங்கம,22 வெள்ளி, 17 வெங்கலம்) வாங்கியிருக்கிறோம். தகவலுக்கும் தவறை சுட்டியமைக்கும் நன்றி.
2002இல் மூன்றாவதான கனடா 116, இம்முறை 86; இரண்டாவதாக வந்த இங்கிலாந்து 165; இவ்வருடம் 110.
சென்றமுறை பெண்கள் ஹாக்கியில் சாதனை நிகழ்த்தினால் இம்முறை டேபிள்டென்னிஸில் முதல் seedஐ வென்று பெற்ற பதக்கம் இனிமையானது.
உண்மைதான்.. எங்கெங்கு காணினும் நடிகையடான்னு, பதக்கம் வென்ற வீரர்களை விட, நடிக நடிகையர் முகம் தான் காணப்பட்டது நேற்று.....
வருகைக்கு நன்றி பூன்ஸ்.
Timely post!
மறுமொழியிட