கொங்குராசாவின் மூலம் தமிழ்மணத்தில் மையம் கொண்ட நன்நான்கு ஆட்டம் ஏழாவது கட்டத்தில் என்னை (ராசா->D ராஜ் -> ஜோசஃப் -> ராகவன் -> இராமநாதன் ->கொத்ஸ் -> நிலா) நிலவிலிருந்து வந்தடைந்திருக்கிறது. மதி கூறுவது போல இப்போது சலிப்படைய ஆரம்பித்திருக்கிறது. மேலும் இளவஞ்சியின் இடுகைக்குப் பிறகு நாமெல்லாம் "எனக்குத் தயிர்சாதம் பிடிக்கும்" என்றொரு இடுகை இடத்தேவையா என்ற தயக்கம் வேறு. இருந்தாலும் பதிவு இட கிடைத்த வாய்ப்பை கைவிட மனமின்றி நானும் எனது 'பிடித்த நாலை' சொல்கிறேன்.
தருமி அவர்கள் போன்று நான் ஒரே ஊரிலேயே வளர்ந்தும் வாழ்ந்தும் இருக்க முடியவில்லை. ஆனால் பணி தொலைதொடர்புத் துறையில் மட்டுமே. இடமாற்றம் உண்டே தவிர பணியில் மாற்றமில்லை.பணிநிமித்தம் இந்தியாவெங்கும் நன்கு சுற்றியிருக்கிறேன்.
வளர்ந்த இடங்கள்:
செங்கை - பிறந்த ஊர்
கோவை - சொந்த ஊர், ஆரம்பப் பள்ளியும் பொறியியல் படிப்பும்
சென்னை - இடைநிலை பள்ளி மற்றும் பின்னாளில் பட்ட மேற்படிப்பு
மதுரை - பள்ளி இறுதியும் பல்கலை புகுமுகமும்
வாழ்ந்த இடங்கள்:
பெங்களூரூ -
கொல்கொதா
கொச்சி
சென்னை
மும்பை (தற்போது)
சென்று வியந்த இடங்கள்:
இடங்கள் பல, உயர்ந்த நான்கு
பாம்பன் பாலம், இராமேஸ்வரம்
இலங்கை அனுராதபுரம், கண்டி ,கதிர்காமம்
கவரத்தி, இலக்ஷ தீவுகள்
ஸ்விட்சர்லாந்து
பார்த்த பரவசங்கள்:
தாஜ்மகால்
பிஸா சாய்வு கோபுரம்
ஈஃபல் கோபுரம்
விக்டோரியா மெமோரியல், கொல்கோதா
பிடித்த கலைஞர்கள்:
எம்.ஜி.ஆர் (நடிப்பிற்காக அல்ல)
சிவாஜி,தற்போது கமல்
மனோரமா
நாகேஷ்
மனதில் நின்ற படங்கள் (உயர்ந்த நான்கு):
எங்கவீட்டு பிள்ளை
வீரபாண்டிய கட்டபொம்மன்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நாயகன்
தவமாய் தவமிருந்து (இன்றைய)
இசைக் கலைஞர்கள்:
MS சுப்புலட்சுமி
மண்டோலின் ஸ்ரீநிவாஸ்
லால்குடி ஜெயராமன்
பீட்டில்ஸ்
பின்னணி கலைஞர்கள்:
S.P.B
ஹரிஹரன்
பாம்பே ஜெயஸ்ரீ
ஷ்ரேயா கோஷால்
விளையாட்டு வீரர்கள்:
1.சச்சின்
சானியா மிர்ஸா
பிரகாஷ் படுகோன்
விசுவநாதன் ஆனந்த்
மகிழ்வான தருணங்கள்:
மதுரை ஆரப்பாளயத்திலும் இரயில்வே காலனி மைதானத்திலும் கிரிக்கெட் விளையாடி திரிந்த நாட்கள்.
அடுத்தநாள் தேர்வுக்கு, முதல் நாள் ஜெயந்தி/தியாகராஜாவில் ஒரு டிக்கெட்டிற்கு இரண்டு சினிமா பார்த்து இரவு ஒரு மணிக்கு எலியட்ஸ் பீச்சில்( ஏன் அந்த பெயரை எடுத்து விட்டார்கள் ?:( )குளித்துவிட்டு( இப்போது அடிக்கடி ஒரு drowning படிக்கும்போது 'பக்' கென்கிறது) வேளச்சேரி கேட்டில் இருந்த ஒரு டீ கடையில் ஃப்ரெஷாக படிக்க ஆரம்பித்த குழுக்கள்.
இளம்பனியில் கொல்கொதா ரவீந்த்ர சரோவரில் என்குழந்தைகளுடன் விளையாடித் திரிந்த நாட்கள்; 'சிறந்தது இரவீந்த்ர சொங்கீத்தா நுஸ்ருல் கீத்தா' என்ற சூடான விவாதத்தில் நுழைந்து இரண்டுமே அழுகை சங்கீதமே என்று தீர்ப்பு வழங்கி டின் கட்டிக் கொண்டது.
மகளின் திருமணநாள்.
என்னைக் கவர்ந்தவர்கள்:
1.காமராசர் - எளிமை, புத்திகூர்மை,செயலாற்றல்
அன்னை தெரசா - அன்பு, சேவை (கொல்கொதாவில் அவர் நிலையத்திற்கு சென்றது மறக்க முடியாது)
வி.பிரபாகரன்* - கொள்கைப் பிடிப்பு, நாடாளும் பண்பு
ஜெயலலிதா* - பிடிவாதம்,சமயோசிதம், ஆணாதிக்க உலகில் எதிர்நீச்சல்
(* இவர்களின் அரசியலை ஆதரிக்கிறேன் என்று கொள்ளாதீர்கள் :))
இதுவே கிடைத்தது சான்ஸ் என்று நிறைய சுயபுராணம் பாடியாகி விட்டது
. மற்றபடி உணவு
, வலைத்தளங்கள்
, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கிடைத்ததை மேயும் இரகம்தான்
. இனி நான் அழைக்கும் நால்வர்
: 1 ஸ்ரீமங்கை (K.சுதாகர்).
ராம்குமார்
--L-L-D-a-s-u---
கல்வெட்டு
கடந்த நாலுநாட்களாக இந்த நாலுக்காக ஒரேமலரும் நினைவுகள் தான். கடந்ததையும் கனவுகளையும் நனவுகளின் அழுத்தத்தில் தொலைத்து வாழும் எனக்கு இது சுகமாய் இருந்தது. நான் நன்றி சொல்வேன் அந்த நிலாவுக்கு.